இஸ்ரவேலும் சபையும் பாகம் 5 ISRAEL AND THE CHURCH #5 53-03-29 Jeffersonville Indiana U.S.A. தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம் இஸ்ரவேலும் சபையும் பாகம் 5 ISRAEL AND THE CHURCH #5 53-03-29 Jeffersonville Indiana U.S.A. இன்றிரவு நாம் அவர்களை சொந்த தேசத்தில் பொருத்தப் போகிறோம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது இன்று காலையில் நாம் கேள்வி பதில்களை கொண்டிருந்தோம். என்னே! அவைகளில் அதிகமானவைகளை பெற்றிருந்தோம். நான் ஒன்பது மணிக்கு துவங்கியதுபோல தோன்றினது, இரண்டு முப்பது வெளியேறினோம். நான் இன்னமும் எல்லா வகையான கேள்விகளையும் மிகுதியாக பெற்றிருக்கிறேன். ஆனால், ஒரு வேளை அடுத்த வாரத்தில் நாம் அவைகளை பார்க்கலாம். அங்கே மேலே இன்னும் அதிகமானவைகள் இருக்கிறது, நான் இன்னும் பார்க்கக்கூட இல்லை, நம்மால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவைகளை பார்க்கலாம். சகோ. டாம் அடுத்த வாரத்தில் நம்முடன் தங்குகிறார் என நம்புகிறேன். ஆக நிறைய பிரசிங்கிமார்களை இங்கே நாம் பெற்றிருக்கிறோம். நம்மில் ஒருவருக்கு தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் அடுத்தடுத்து ஒவ்வொருவராக நாம் பிரசங்கிக்கலாம். 2. கடந்த ஏழு வருடங்களில் இந்த வகையான ஒரு எழுப்புதலை துவங்குவது, எனக்கு இதுவே முதன் முறையாயிருக்கிறது. என்னுடைய கடைசி எழுப்புதல் கூட்டத்தை இங்கே கூடாரத்தில் ஏழு வருடத்திற்கு முன்பு நான் நடத்தினேன். அது சுகமளிக்கும் ஆராதனைகளாக இருந்தது. இலட்சக்கணக்கான காரியங்களையும் மகத்தான ஜனக்கூட்டங்களையும், நாங்கள் கொண்டிருந்தோம் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒரு சிறந்த நேரத்தை நான் கொண்டிருந்ததில்லை. நான் வெறுமனே ஒரு நல்ல நேரத்தை உடையவனாயிருந்தேன் 3. சகோ. ரைட், நேற்றிரவு நான் ஒரு அற்புதமான நேரத்தை அனுபவித்தேன், ஒரு குதிரை புல் சாப்பிடுவது போல நான் சந்தோசமான நேரத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன். கர்த்தர் எங்களை ஆசிர்வதிக்கவே ஆசீர்வதித்தார். 4. நாங்கள் கரங்களை தட்டி ஆர்ப்பரிக்கும் அளவிற்கு அவர் இன்று எங்களை ஆசீர்வதித்தார் (He blessed us today till we just liked to have tore the house down) "கரங்களை தட்டிஆர்ப்பரிப்பது" என்பது பண்டைய கால கூடார கூட்டத்தைப் போல தொனிக்கிறது, இல்லையா? ஆனால் நாங்கள் ஒரு அருமையான நேரத்தை பெற்றிருந்தோம். கர்த்தர் எங்களை ஆசிர்வதிக்கவே ஆசீர்வதித்தார். இன்றிரவும் அவர் அப்படி செய்வார் என்று விசுவாசிக்கிறோம். இன்று காலையில் நாம் சில முக்கியமான கேள்விகளின் பேரில் கலந்தாலோசித்தோம். அவைகளில் சில கேள்விகள் ஆழமான வேதாகம பாடங்களாயிருந்தது. 5. இப்பொழுது வருகின்ற வெள்ளிக்கிழமையில் சிலுவையில் அறையப்படுதலை குறித்த ஒரு செய்தி இருக்கும். கர்த்தருக்கு சித்தமானால் வருகின்ற வெள்ளிக்கிழமை இரவு நாம் அவரை சிலுவைக்கு எடுத்துச் சென்று சிலுவையில் அறையப்படுதலைக் கண்டு, சனிக்கிழமை இரவு வரை அவரை கல்லறையில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை காலை ஈஸ்டர் அன்று சூரியோதய ஆராதனையில் நாம் அவரை வெளியே கொண்டு வர முயற்சித்து, அவர் என்னவாயிருக்கிறார் என்று எப்படி நிரூபிக்கிறார் என்பதை உங்களுக்கு காண்பிப்போம். 6. சரியாக அதற்கு பின்பு, கர்த்தர் நம்மை ஒரு பெரிய சுகமளிக்கும் ஆராதனையை அனுமதிப்பாரென்றால், மிக அழகாக இருக்குமல்லவா? அது கொண்டிருக்க மிக அருமையாக இருக்கும். ஒருவேளை சில ஆயிரக்கணக்கான ஜனங்களை கொள்ள, உயர்நிலைப்பள்ளியின் மைதானத்தை, அல்லது வேறொன்றை எடுத்து, அதை பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் மற்றவைகளிலும் விளம்பரம் செய்து ஒரு மிகப்பெரிய சுகமளிக்கும் ஆராதனையை கொண்டிருக்கலாம். வழக்கமாக நாங்கள் சுகமளிக்கும் ஆராதனையை நடத்தும்பொழுது ஆயிரக்கணக்கான ஜனங்கள் வருகிறார்கள். விபாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பது என்னுடைய அழைப்பாயிருக்கிறது. அந்த ஜெப வரிசையில் அத்தகைய அற்புதமான அனுபவம் உண்டாயிருந்தது. அவர் ஊழியக்களத்தில் இருந்து என்னை எடுத்து இங்கே கொண்டு வந்திருக்கிறார். இப்பொழுது கர்த்தர் இதை நிர்ணயத்திருக்கிறார் என்று தம்புகிறேன். ஏழு வருடங்களுக்கு பிறகு அவர் வேறாரு அடைப்புக்குறியை எழுப்பப்போகிறார். அது அவருடைய நினைவு சின்னமாய் இருக்குமென்றும், கொஞ்ச காலம் அது செல்லும் என்றும் நான் நம்புகிறேன். "வெள்ளம் போல சத்துரு வரும்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் அதற்கு விரோதமாய் கொடியேற்றுவார்" என்று அவர் கூறினார். இன்றிரவு நம்முடைய பாடப்பொருளுக்காக ஒரு வேத வசனத்தை நான் வாசிக்க விரும்புகிறேன். 8. சரியாக இப்பொழுது நமக்கு ஒரு ஞானஸ்நான ஆராதனை இருக்கிறது. இன்றிரவு நான் அதிக நேரம் பேசமாட்டேன். ஒவ்வொரு இரவும் நான் இரண்டரை மணி நேரம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன். அது உங்களுக்கு தண்டனையாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றிரவு நான் அதை செய்ய முடியாது. ஏனென்றால் நான் அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. சரியாக சூரியோதய ஆராதனைக்கு பிறகு, ஈஸ்டர் காலையில் மேலும் இங்கே கூடாரத்தில் தண்ணீர் ஞானஸ்நான ஆராதனை இருக்கும். ஈஸ்டர் காலை ஞானஸ்நானம். 10. இன்றிரவு அவர்கள் ஞானஸ்நானம் கொடுப்பார்கள். நாம் ஞானஸ்நானம் கொடுப்பதில் "பாப்டிஸ்ட்டுகளாய்" இருக்கிறோம். அப்படியே பாப்டிஸ்டுகள் அல்ல, நாம் வேதபூர்வமாய் இருக்க வேண்டும். ஆனால் வேதபூர்வமாய் முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதில் நாம் விசுவாசம் கொண்டுள்ளோம். இப்பொழுது நீங்கள் அந்தவிதமாக விசுவாசிக்கவில்லையென்றால், அது உங்களைப் பொறுத்தது. ஆனால் நாங்கள் முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதில் விசுவாசம் கொண்டுள்ளோம். 11. இப்பொழுது நான் வைத்திருக்கிற வேத வசனமானது... கடந்த நான்கு வருடங்களில் அநேக முறை நான் வேதத்தை திருப்பும்போதெல்லாம் இந்த அதிகாரத்திற்கே ஒருமுறை கூட தவறாமல் திரும்பும். சற்று முன்பு வரை நான் அறியாமல் இருந்தேன். அந்த வேத வசனம் இன்றிரவு செய்தியின் முடிவுவரை சரியாக கிரியை செய்துகொண்டு வந்திருக்கிறது. 12. அடுத்த வாரத்தில் நாம் மறுபடியும் ஆதியாகமத்திற்குள்ளாகவோ அல்லது வேறு அதிகாரத்திற்குள்ளாகவோ செல்லலாம். கர்த்தருடைய வழி நடத்துதலின்படி வருகின்ற வாரத்தில் எதற்குள்ளாக செல்வோம் என்று இன்னும் நமக்கு தெரியவில்லை. ஆனால் இன்றிரவு..... 13. சில காலத்திற்கு முன்பு, பீடத்தை விட்டு நீங்காமல் இரவும் பகலும் எட்டு நாட்களாக ஜெப வரிசைகளை அமைத்து மணிக்கணக்காக அங்கேயே தரித்திருந்தேன். பீடத்தை விட்டு நீங்காமல் அங்கேயே என் உணவை எடுத்துக் கொண்டு பீடத்திலேயே உறங்கினேன்..... நான் இங்கே வியாதியாயிருந்த பொழுது, இல்லை, நான் வியாதியாயிருக்கவில்லை. நான் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாதவனாய் இருந்தேன். "என்னால் முடிந்தவரை எல்லோருக்காகவும் நான் ஜெபிக்க போகிறேன்" என்று கூறினேன். நான் அந்த கூட்டத்தை முடித்து சென்ற பொழுது அந்த நகரத்தில் ஜெபிக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் இருபத்தெட்டாயிரம் பேர் இருந்தார்கள். அது பத்திரிக்கையில் சொல்லப்பட்ட எண்ணிக்கை. அவர்கள் அங்கே இருந்தனர் என்று ஜோனஸ்போரோ சன் (Jonesboro Sun) என்ற பத்திரிக்கை அறிவித்தது. இப்பொழுது பின்னர்...... 14. (ஒரு சகோதரன், "சகோதரன் பில், அர்கன்சாஸில் நடந்த கூட்டத்தைக் குறித்து இன்னும் பேசி கொண்டிருக்கிறார்கள். நான் சென்ற இடமெல்லாம் "ஜோனஸ்போரோவில் பிரன்ஹாமின் கூட்டம்" என்று பேசிக்கொண்டிருந்தார்கள் என்று சகோதரன் கூறுகிறார்- ஆசி) எங்களுக்கு ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது. அங்கு தான் குருடர், செவிடர், ஊமையர், முடவர்கள் மற்றும் அனைவரும் குணமாக்கப்பட்டனர். அங்கிருந்து உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. ("நான் அவர்களை சந்தித்தேன், சகோதரன் பிரன்ஹாமே, அந்த கூட்டத்திலிருந்து அவர்கள் இன்னமும் குணமாகிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அந்த சகோதரன் கூறுகிறார்- ஆசி) அது அற்புதமானது. உங்களால் அவர் சொல்வதைக் கேட்க முடிகிறதா? ஓ! ஆம். தேவன் காரியங்களை ஒட்டு போடுவதில்லை. அவர் அதை சுகமாக்குகிறார். அது சரியானது. அவர் அதை நன்றாக செய்கிறார். நான் மீண்டும் அங்கே சென்று மறுபடியும் வேறொரு கூட்டத்தை நடத்த விரும்புகிறேன். ("ஆமென். அவர்கள் உம்மைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் மலைகளிலிருந்தும் பள்ளத்தாக்கிலிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் வருகிறார்கள்" என்று அந்த சகோதரன் கூறுகிறார். ஆசி) 15. சில நாட்களுக்கு முன்பு மெம்பிஸில் எங்களுக்காக கிறிஸ்துவின் சபையார். இல்லை அது ஒரு சபை அல்ல, 'வாலிபம் கிறிஸ்துவுக்காக' என்ற அமைப்பினர் அந்த பெரிய நினைவு அரங்கத்தை ஏற்பாடு செய்வதாக இருந்தனர். பிறகு பரிசுத்த ஆவியானவர் "வீட்டிற்கு வா என்றார். நாங்கள் கூட்டத்தை ரத்துசெய்தோம். ஆகவேதான் நான் இங்கே இருக்கிறேன். எனக்கு தெரியவில்லை. 16. அவர் ஒருமுறை ஒரு பெரிய மகத்தான எழுப்புதல் கூட்டத்தில் பிலிப்பை கொண்டிருந்தார். அவனை வனாந்திரத்திற்கு சென்று ஒரு மனிதனுக்கு பிரசங்கிக்கும்படி சொன்னார். அவன் அங்கு சென்றான். அது சரி. சரியாக எழுப்புதலின் உச்ச கட்டத்தில் அந்த கூட்டத்தை விட்டு சென்றான். அது சரி. அது மிகவும் சரியானது. தேவன் என்ன செய்யக்கூறுகிறாரோ அதையே நாம் செய்ய வேண்டும். இப்பொழுது, அது யோசுவாவின் புத்தகம் 1ம் அதிகாரம். 17. இந்தியாவிற்கு செல்லும் தரிசனத்தில். நான் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பொழுது, காலையில் படுக்கையில் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன் உங்கள் அனைவருக்கும் அந்த கதை தெரியும். அந்த தரிசனங்களில்..... 18. என்னுடைய சுகமளிக்கும் கூட்டங்களில் ஒன்றில் எத்தனை பேர் இருந்திருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை காணட்டும். நிச்சயமாக. தரிசனங்கள் எப்படி தோன்றுகின்றன என்று நீங்கள் அறிவீர்கள். நான் இங்கே ஒரு இரவில் சுகமளிக்கும் ஆராதனையை கொண்டிருந்தபோது எத்தனை பேர் இங்கே இருந்தீர்கள்? அந்த நேரத்தை நினைவு கூறுகிறீர்களா? அது அந்த முற்றத்தில் சுற்றிலும் கூட்டம் நிரம்பியிருந்தது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. ஒரு பெண் சக்கரநாற்காலியில் அமர்ந்து தள்ளிக் கொண்டு வந்தாள்(rolled). அவள் செயல் இழந்தவளாய் பலவருடங்கள் உட்கார்ந்து கொண்டிருந்து அவள் இடுப்பிலிருந்து வெண்மையாக மாறிக் கொண்டிருந்தது. பரிசுத்த ஆவியானவர் அவள் செய்ய தவறியதையும் செய்த எல்லாவற்றையும் அவளிடம் கூறினார். அவள், "தேவன் என்னை சுகமாக்குவாரானால், நான் அதை செய்வேன்" என்றாள். நான், "கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எழுந்திரு" என்றேன். அவள் சாதாரணமாக கட்டிடத்தை விட்டு வெளியே நடந்து சென்றாள். பாருங்கள்? பாருங்கள்? தொல்லை என்னவென்பதை கண்டு பிடிப்பதுதான் காரியம். நீங்கள் எப்பொழுதும் சுகத்தை பெறுவதற்கு முன்பு அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். 19. ஆக நாங்கள் சுகமளித்தல் கூட்டத்தை தொடங்க விரும்பவில்லை. "நம்பிடுவாய்" என்று இசையை இசைக்க தொடங்குகையில் நாங்கள் ஜெபவரிசையை ஒழுங்கு செய்வோம். ஆனால் இங்கு இப்பொழுது சிறிது நேரம் பேச விரும்புகிறோம். 20. இப்பொழுது இந்த தரிசனத்தை பற்றி உங்களுக்கு சொல்லி முடிக்கட்டும். ஒரு தரிசனம் எனக்கு முன்பாக திறப்பதை கண்டேன். ஒரு மனிதன் என்னிடத்தில் வந்தார். அவரிடம் சில காகிதத்தாள்கள் இருந்தன. அவர் "உன் எதிர்காலத்தைக் குறித்து நீ அதிகமாய் கொண்டிருந்தாய்" என்று கூறி, அந்த தாள்களை எடுத்து சிந்தித்து இதுபோன்று எறிந்தார். அவைகள் ஆகாயத்தில் பறந்து சென்றன. அந்த தரிசனத்தை வேதாகமத்தில் எழுதி வைத்துள்ளேன். கடைசி நாட்களில் என்ன சம்பவிக்கும் என்று எழுதி மூலைகல்லில் வைத்தது என்னவென்று உங்களுக்கு தெரியும். அது வார்த்தையின்படி சரியாக இருந்தது. அது அந்தவிதமாகத்தான் இருக்கும். அவர் "உன் எதிர்காலம் தெளிவாக உள்ளது. உனக்கிருந்த தொல்லையை பற்றி சிந்தித்து கொண்டிருந்தாய், இதற்குமேல் அது உன்னை விட்டு போய்விடும், இனி அந்த தொல்லை உனக்கு இருக்காது"என்று சொன்னார். மேலும் அவர் "வேறொரு காரியம் என்னவென்றால், உன்னுடைய கூட்டங்களை எப்படி நடத்துவது என்பதை குறித்து வியந்து கொண்டிருந்தாய்", என்றார். 21. நான் இரண்டு நபர்களுக்கு ஜெபிக்கிறவேளையில் ஓரல் ராபர்ட்ஸ் ஐந்நூறு நபர்களுக்கு ஜெபித்துவிடுவார் என ஒவ்வொருவரும் என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் ஓரல் ராபர்ட்ஸ் அல்ல. தேவன் எனக்கு ஒரு ஊழியத்தையும் ஓரல்-க்கு வேறொரு ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார். அவர் அப்படியே அவர்கள் மேல் கரங்களை வைத்து கடந்து செல்கிறார், ஓரல் என்ன செய்தாலும், தேவன் அந்த வழியில் தான் அவரை செய்யும்படி அவருக்கு சொன்னார். ஆனால் நான் நின்று உண்மையான காரியம் என்னவென்பதை கண்டறியவேண்டும். 22. நண்பர்களே, இதை நீங்கள் கவனிக்க வேண்டும். இது ஒரு ஆபத்தான காரியமாயிருக்கிறது. ஞாபகம் கொள்ளுங்கள், ஏதோ ஒன்றை சரிசெய்ய, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு நபர் மேல் தேவன் ஒரு சாபத்தை வைத்தாரென்றால், அவர்கள் இன்னும் அதை சரிசெய்யாதிருக்கையில், ஒரு தீர்க்கதரிசி வந்து அந்த சாபத்தை எடுத்துப்போட முயற்சிப்பானென்றால் அது எப்படியாய் இருக்கும்? பிறகு நீங்கள் தேவனுடன் தொல்லையில் அகப்படுகிறீர்கள். 23. இன்றிரவு நாம் பேசிக் கொண்டிருக்கிற நம்முடைய கதாபாத்திரமாகிய மோசேயைப் பாருங்கள். தேவன் அவனிடம் "நீ போய் கன்மலையிடம் பேசு," என்றார். அவன் சென்று கன்மலையை அடித்தான். அதற்காக தேவன் மோசேயினிடத்தில் கடுமையாக நடந்து கொண்டார். 24. வாலிப தீர்க்கதரிசியாகிய எலிசாவைப் பாருங்கள். இந்த வாலிபநபர் வழுக்கை தலையுடன் சென்றான். சிறு பிள்ளைகள் அவனைப் பார்த்து எள்ளி நகையாடி, "மொட்டைத் தலையா, நீ ஏன் ஏறிப்போகவில்லை?" என்றார்கள். கோபமடைந்த அந்த தீர்க்கதரிசி திரும்பி, கர்த்தருடைய நாமத்தினால் அந்த சிறு பிள்ளைகளை சபித்தான். இரண்டு பெண்கரடிகள் வந்து நாற்பத்திரண்டு அப்பாவி குழந்தைகளை கொன்றன. இப்பொழுது நீங்கள் அது பரிசுத்த ஆவியினுடைய சுபாவம் என்று சொல்ல முடியாது. ஆனால் அது ஒரு கோபம் கொண்ட தீர்க்கதரிசியாயிருந்தது. நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். 25. யோவானை பாருங்கள், ஒரு முறை அவன் "நாம் வானத்திலிருந்து அக்கினியை இறங்கி வரப்பண்ணி அவர்களை எரித்து போடுவோமா? என்றான். இயேசு "நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்கள் என்பதை அறியாமலிருக்கிறீர்கள்" என்றார். 26. பாருங்கள். நீங்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். எளிமையாகவும் பொறுமையாகவும் இருந்து பரிசுத்தஆவியானவர் என்ன செய்ய சொல்கிறார் என்பதை கவனியுங்கள். 27. சிறிது காலத்திற்கு முன்பு வீட்டிற்கு ஒரு இளம் பெண் வந்தாள். அவள் ஐம்பது முறை அபிஷேகிக்கப்படும் அளவிற்கு அதிகமாக ஜெபிக்கப்பட்டிருந்தாள் என்று யூகிக்கிறேன். நானும் அவளுக்காக அங்கே ஜெபம் செய்திருந்தேன். ஒரு நாள் காலையில் நாங்கள் அறையில் அமர்ந்திருந்த பொழுது கர்த்தருடைய தூதனானவர் அருகில் வந்து அவளிடம் பேசத் தொடங்கி, அவள் என்ன செய்தாளென்றும், ஏதோ ஒன்றை அவளுடைய ஆத்துமாவிற்குள் எட்டுவருடங்களாக மறைத்துவைத்தாளென்றும் கூறினார். அவள் அதை யாரிடமும் கூறவில்லை. மனோதத்துவ நிபுணர்களும் அவளிடமிருந்து அதை வெளியே கொண்டுவர முடியவில்லை. ஆனால் கர்த்தருடைய தூதன் அதை சொன்னபொழுது, அவள் தரையில் விழுந்து, அழ ஆரம்பித்து கிட்டத்தட்ட மயக்கமடைந்தாள். நான் "நீ போய் அதை சரிப்படுத்து. தேவன் உன்னை சுகமாக்குவார்." என்றேன். அது சரி. அவள் தன் கணவனிடம் சென்று காரியத்தை சரிப்படுத்தி திரும்பி வந்தாள். இன்றைக்கு அவள் சுகமாக இருக்கிறாள். எப்படியாக காரியங்கள் நடந்தன! நான் யாரைக்குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று இக்கட்டிடத்தில் உள்ள எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? நிச்சயமாக உங்களில் அநேகருக்கு தெரியும். நான் தவறாயில்லையென்றால், ஒருவேளை அந்த ஸ்திரி இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கலாம் என நான் நினைக்கிறேன். அது மிகவும் வெட்கமடைகிற காரியமாயிருந்தது. ஆனால் தேவன் கிரியை செய்தார். 28. இப்பொழுது, பாருங்கள் இந்த எல்லா ஜெபங்களும், உணர்ச்சி வசப்படுதல்களும், பிசாசுகளை துரத்துதலும் செய்யப்பட்ட போதும் கூட, அவள் செய்த அந்த பாவத்தை ஒருவரிடமும் சொல்ல விரும்பாமல் தன்னுடைய இருதயத்தின் ஆழத்தில் மறைத்து வைத்திருந்தாள், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவளுடைய இருதயத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தினார். அவள் அதை சரிப்படுத்தினபின்பு சுத்தமானாள். தேவன் பாவத்தின் மேல் ஆசீர்வாதத்தை வைக்க மாட்டார். முதலில் நீங்கள் அதை சுத்தப்படுத்த வேண்டும். அது சரி. 29. இப்பொழுது, ஜெபிக்கின்ற காரியத்தில் (சகோதரன். ராபர்ட்ஸ் அவர்களே), கர்த்தருடைய தூதன் என்னிடம் "நீ வழி நடத்தப் படுகிறபடியே செய்" என்றார். 30. பிறகு அவர் என்னை தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனுக்கு கொண்டு போனார். அங்கே அந்த கடைசி கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்களை கொண்டிருந்தோம். கர்த்தர் எவ்வளவாய் வல்லமையான கிரியைகளையும் மகத்தானவை களையும் செய்ததை அவர்கள் கண்டபொழுது ஒரே நாளில் முப்பதாயிரம் பேர் மனந்திரும்பினார்கள். பிறகு நான் மீண்டும் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தபொழுது, இதுபோன்ற கூட்டத்தைப் போல கடந்து போகின்ற வேறொரு கூட்டத்தை அவர் எனக்கு தரிசனத்தில் காண்பித்தார். 31. பிறகு அவர் இந்த வழியில் என்னை திருப்பினார். ஒரு தேவதூதன் ஒளியுடன் இறங்கிவந்து, அதை மேலே ஒளிரச் செய்தான். நான் மகாதிரளான ஜனக்கூட்டத்தை கண்டேன். அவர்கள் இந்திய உடையை தரித்திருந்த இந்தியர்களாயிருந்தனர். அவர் எனக்கு சொன்னார்..... மேலும் அந்த தூதன் மிக அருகில் என்னிடத்தில் வருவதைக் கண்டேன். அப்பொழுது நான், "யார் இந்த ஜனங்கள்?", என்று கேட்டேன். 32. அங்கே பின்பாக இருக்கின்ற படத்தில் நீங்கள் பார்க்கின்ற அந்த தூதன் எனக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் எனது பக்கத்தில் வந்து, "அங்கே அந்த கூட்டத்தில் மூன்று இலட்சம் பேர் இருப்பார்கள்," என்றார். 33. இப்பொழுது இதை உங்களுடைய வேதாகமத்தில் குறித்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் மூன்று இலட்சம் ஜனங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். ஒரே நேரத்தில் ஒரு இலட்சம் மனமாற்றங்களை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் இந்தியாவிலிருந்து திரும்பி வரும்பொழுது அந்த அறிக்கையை கவனித்துப் பாருங்கள். புரிகின்றதா? இந்தியாவில் ஏற்கனவே நாற்பது சதவீதம் கம்யூனிசத்திற்கு திரும்பி இருக்கும் நிலையில், இந்த ஒரே ஒரு காரியம் தான் கம்யூனிசத்தை தடுத்து நிறுத்தும். 34. கவனியுங்கள், (நான் இதை மரியாதையுடன் சொல்கிறேன்) "சபையானது வாசிப்பதையும், எழுதுவதையும், கணிதத்தையும், மற்றும் சுவிசேஷத்தினுடைய மனோதத்துவ பகுதியை காட்டிலும் அதிகமாக வேறொன்றை செய்யாவிட்டால், இந்தியர்களின் கதை அவ்வளவுதான்". ஆப்பிரிக்கா குடிகளை போல இந்தியர்கள் தேவனுடைய வல்லமையை கிரியைகளில் காண வேண்டும். ஐம்பது வருடங்களாக மிஷனரிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம். ஆனால் அவர்கள் சுகமடைய வேண்டும் என்ற இடத்திற்கு வந்த பொழுது அந்த மிஷனரி "ஓ! வேதாகமப்பள்ளியில் நாங்கள் கற்று இருக்கிறோம். அந்த காரியங்கள்! அந்த நாட்களெல்லாம் முடிந்து விட்டன. பாருங்கள்! அது போன்ற காரியங்கள் கிடையாது, அது ஏற்கனவே முடிந்து விட்டது", என்றார். நல்லது அவனுடைய சுகமளித்தலுக்காக அவன் தன்னுடைய சிலையை சுமந்து சென்றான். கிறிஸ்தவர்களாக மாறியிருக்க வேண்டியவர்கள் சிறிய மண் சிலையை சுமந்து கொண்டிருந்தனர், ஏன்? மிஷனரிகள் சுகமளித்தலைக் குறித்து அவ்விதமாக அவர்களுக்கு சொன்னார்கள். அவர்கள் சுகமளித்தலை சிலையில் இருந்து பெற்றனர் (சிலையின் மூலமாக அல்ல) தேவன் மூலமாக, தேவன் அவர்களுடைய அறியாமையை கண்டு கொள்ளவில்லை. 35. நான் அவனிடம் "அந்த மிஷனரி கூறின அந்த மெய்யான தேவன் தான் எல்லாவிதமான சுகமளித்தலுக்கும் ஊற்று" என்று கூறினேன், பின்பு அந்த சுகமளித்தலை மேடையின் மேல் அவர்களுக்கு நிரூபித்தேன். பிறகு அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு காடுகளுக்குள் சென்றனர். வெளியே சென்ற அந்த நபர்களில் ஒருவன் ஒரு வாரத்தில் சராசரியாக ஆயிரம் பழங்குடிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். அவன்தான் மிஷனரி. தேவன் துரிதமாக கிரியை செய்துகொண்டிருக்கிறார். 36. என்னுடைய ஆத்ம நண்பரான ரேமண்ட் ஹோக்ஸ்டராவும், டாக்டர் வியாட்டும் 'சுகமளிக்கும் சிறகுகள்" என்ற நிகழ்ச்சியில் பேசுகிறதை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக, ரேமண்ட் ஹோக்ஸ்டரா நம்முடைய கூடாரத்தில் பிரசங்கித்திருக்கிறார். அவர் அங்கே இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கு சென்று, ஒரு எழுப்புதலை கொண்டிருந்து ஆயிரக்கணக்கான மனந்திரும்பினவர்களை உடையவராயிருந்தார். தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பாருங்கள்? ஒ! ஒ! கவனியுங்கள் அங்கே.... 37. இதை நான் கேட்கட்டும், இதை சொல்லட்டும். உங்களுக்கு நான் ஒரு விளக்கத்தை கொடுக்கட்டும். இங்கே, இங்கே ஒரு வட்டம் இருக்கிறது, இங்கே வேறொரு வட்டம் இருக்கிறது. மேலும் இங்கே மற்றொன்று இருக்கிறது, இப்பொழுது இங்கே கீழே பெயரளவு சபை இருக்கிறது, மேலே தேவனுடைய வல்லமை கசிந்து கொண்டிருக்கிற இடமாகிய பரலோகத்திற்கு அடுத்த வாசலாகிய இந்த உயர்ந்த சபை இங்கிருக்கிறது. இங்குதான் நாம் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அது சரிதான். இந்த ஒன்றின் மேல் தேவனுடைய வல்லமை சிந்துகிறது. பிறகு இதன்வழியாக அதற்கு கீழே இந்த ஒன்றிற்கு, பிறகு இதன்வழியாக இன்னொன்றிற்கு சிந்துகிறது. இதுதான் பெயரளவு சபை, இது குளிர்ந்த அறிக்கையை செய்து சடங்குகளுடைய விவகாரங்களுக்குள் செல்கிறது. அதுதான் பெயரளவு சபை. இவர்கள் குறைந்த அளவு சொட்டுகளையே (தேவ வல்லமையையே - ஆசி) பெறுகிறார்கள். இங்கே மேலே அடுத்த சபை, முழு சுவிசேஷ சபை சில ஆசீர்வாதங்களை பெறுகிறது. ஆனால் அது கொள்கைகளுக்குள்ளாக செல்கிறது. நாம் எடுத்து கொள்ளப் படுவதற்கு முன்பு இந்த அடுத்த வட்டத்திற்குள்ளாக உயர்த்தப்பட்டிருப்போமானால், அது மிகவும் சரி, நாம் எடுத்து கொள்ளப்படுவதற்கு முன்பு தேவனுடைய வல்லமை கசிந்து கொண்டிருக்கிற அந்த சபையில் நீங்கள் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அது உண்மை. 38. இப்பொழுது, அதை உங்களுடைய வேதாகமத்தில் குறித்துக் கொள்ளுங்கள். அவர், அந்த அக்கினிஸ்தம்பம், நான் குழந்தையாயிருந்தது முதற்கொண்டு, எதையும் தவறாக சொன்னதில்லை. இப்பொழுது, நான் பிறந்த பொழுது பதினைந்து வயதாயிருந்த என்னுடைய தாயார் அங்கே பின்பாக உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் சிறிய ஜன்னலை திறந்தார்கள், அப்பொழுது கர்த்தருடைய தூதன் உள்ளே வந்து அங்கே நின்றார். அந்த நேரத்திலிருந்து அவர் ஒருபோதும் என்னிடத்தில் தவறாக ஒரு காரியத்தையும் சொன்னதேயில்லை என என்னால் ஞாபகங்கொள்ள முடிகிறது. நான் பிறந்து வளர்ந்த நகரத்திலேயே இப்பொழுது இருக்கிறேன்.. உங்களில் அநேகர் அந்நியராயிருக்கிறீர்கள். இந்த நகரத்தினுடாக சென்று எந்த நபரையாவது, சந்தித்து கர்த்தருடைய நாமத்தினால் சொல்லப்பட்ட காரியங்கள் அதேவிதமாகவே சரியாக நிறைவேறியதா என கேட்டுப்பாருங்கள். ஆகவே அது எல்லாமே சரியாயிருந்தது என்று நான் அறிவேன். பாருங்கள்! அது தேவனாயிருக்கிறது. 39. இப்பொழுது, அந்த தரிசனத்தின் முடிவில் என்னுடைய வேதாகமம் என்னிடத்தில் வருவதை கண்டேன். அது யோசுவா 1ஆம் அதிகாரத்திற்கு திரும்பினது. அது எனக்கு முன்பாக கொண்டே இருந்தது. ஓ! தொடர்ந்து வந்து அதிலிருந்து வெளியேற முடியவில்லை. 40. இன்றிரவு அந்த மகத்தான தலைவன் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை அங்கே கொண்டு செல்கிற காரணத்தால், நான் அதை வாசிக்க விரும்புகிறேன். பிறகு எண்ணாகமத்திற்கு திரும்பிச் சென்று நம்முடைய பாடத்தை எடுத்துக் கொண்டு, அடுத்த இருபது அல்லது முப்பது நிமிடங்களில் அதிலிருந்து வெளியே வருவோம், நமக்கு ஞானஸ்நான ஆராதனை உண்டு, நீங்கள் அதற்கு ஆயத்தமாக முடியும். 41. இப்பொழுது நாம் யோசுவா 1ஆம் அதிகாரத்தை வாசிக்கும் பொழுது கூர்ந்து கவனியுங்கள். கடந்த இரவு மோசேயினுடைய மரணத்திற்கு பிறகு அங்கே தான் அதை நிறுத்தினோம். அது சரியா? மோசே. எங்கே நாம் மோசேயை விட்டோம்? அவன் மரிக்க வேண்டியவனாய் இருந்ததினால், மலையின் மேல் நின்று அவனுடைய ஜனங்களுக்கு கையசைத்து விடை பெற்றுக்கொண்டிருந்தான். இங்கே அவனருகே அந்த கன்மலை நின்று கொண்டிருப்பதை அவன் கவனித்தான். அவன் அந்த கன்மலையின் மீது அடியெடுத்து வைத்தான், தூதர்கள் வந்து அவனை சுமந்து சென்றனர். கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப் பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். 42.இப்பொழுது, நாம் திரும்பவும் எண்ணாகம் புத்தகத்திற்குள் சென்று நேற்று மாலையில் எங்கே விட்டோமோ அங்கிருந்து அதை எடுப்போம். 43. இப்பொழுது, நீங்கள் கூட்டமாயிருக்கின்ற காரணத்தால் சில நிமிடங்கள் உங்களுடைய சிதறாத கவனத்தை தரும்படி விரும்புகிறேன். அநேகர் நின்று கொண்டிருக்கிறீர்கள். கூடாரமானது பெரிதாயில்லை. எங்களால் உதவி செய்ய முடியாதகாரணத்தால், அதை குறித்து நாங்கள் வருந்துகிறோம். இப்பொழுது நாம் மோசேயை.... 44. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து வெளியே வந்திருந்தார்கள். அவர்கள் வனாந்தரத்திற்குள் வந்த பொழுது முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். தேவன் அவர்கள் நடுவில் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார். அவைகள் கடித்ததினால் ஆயிரக்கணக்கானோர் மரித்துக் கொண்டிருந்தார்கள். பின்பு அவர் பாவநிவாரணமாக ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கினார். ஒ! எவ்வளவு அழகானது! அந்த வெண்கல சர்ப்பம் நியாயத்தீர்ப்பை குறித்துப் பேசுகிறது. தெய்வீக நியாயத்தீர்ப்பு, பாவமானது ஏற்கனவே நியாயந்தீர்க்கபட்டுவிட்டது. ஆதியாகமம்: 3:14-ல் தேவன் ஏற்கனவே சர்ப்பத்தை நியாயந்தீர்த்திருந்தார். பின்பு யாத்திராகமம் 17-ல் வெண்கலம், தெய்வீக நியாயத்தீர்ப்பைக்குறித்தும் வெண்கல பலிபீடத்தைக் குறித்து பேசுகிறது என்று நாம் காண்கிறோம். மேலும், எலியாவின் நாட்களில் வானம் வெண்கலமாயிருந்தது என்று நாம் கண்டோம். வெண்கலமானது எப்பொழுதுமே தெய்வீக நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாயிருக்கிறது. 45. இன்றிரவு, நியாயத்தீர்ப்பு அருகில் உள்ளது என்பதற்கு அடையாளமாக தேசங்கள் வெண்கலமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் உலக வரலாற்றின் முடிவில் ஜீவித்து கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் இந்த காரியங்களை அனுமதித்துள்ளார் என்றும், தேசங்களின் மேல் தெய்வீக நியாயத்தீர்ப்பு இருக்கிறதென்றும் நான் விசுவாசிக்கிறேன். நாம் கிறிஸ்துவை புறக்கணித்த காரணத்தினால் தான் கம்யூனிசம் தேசங்களை மேற்கொண்டது. நம்மால் இடுக்கமான நேர்மையான பாதைகளில் நடக்க முடியவில்லை. நாம் விஸ்கியையும் பீரையும் திரும்ப கொண்டு வந்தோம். நாம் ஆயிரக்கணக்கான பன்றிகளை கொன்று புல்வெளிகளிலே எரித்துப் போட்டோம். நாம் கோதுமையை கீழிருந்து பிடுங்கி அதை எரித்து பருத்திகளின் மீது வீசினோம். சமீபத்தில் ஒரு வருடத்திற்குள்ளாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் உறைந்து இறந்தனர். எல்லாம் சரியாயிருக்கிறது, கம்யூனிசம் உள்ளே நுழைந்து அடியோடு அதை கட்டுக்குள் எடுத்து கொண்டது. இப்பொழுது நாம் அதை பெற்றிருக்கிறோம். 46. கிறிஸ்தவம் தன்னுடைய தரத்தை உயர்த்தமுடியாமல் போனதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஏனெனில், அது கிறிஸ்துவால் முடியாது என்பதால் அல்ல. செய்தி ஆயத்தமாக இருக்கிறது. தேவனுடைய வல்லமையும் போதுமானதாய் இருக்கிறது. ஆனால் ஜனங்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். மனிதர்களும் பெண்களும் தேவனுக்கு முன்பாக அவருடைய வார்த்தையை எடுத்து, தைரியமாக அவரை நம்பும் அந்த வட்டத்திற்குள்ளாக நுழைய பயப்படுகிறார்கள். 47. சகோதரர்களே, இதை கூறுவதற்கு மன்னியுங்கள். மோசே, தேவனை ஏமாற்றமடையச் செய்தான். மோசே ஸ்தாபன சபைகளுக்கு ஒரு பரிபூரணமான முன் அடையாளமாயிருக்கிறான். ஆனால் நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். எல்லாக் காரியங்களும் நிழல்களாகவும் அடையாளங்களாகவும் இருந்தன. 48. "ஒ, நான் மெத்தோடிஸ்டை சார்ந்தவன், நான் இதை இதை சார்ந்தவன்" என்று இன்றைக்கு ஜனங்கள் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள். அது மட்டுமல்ல, பெந்தெகொஸ்தே ஜனங்கள், பரிசுத்த ஜனங்கள், நான் அசெம்பிளியை சார்ந்தவன் ஏனெனில் அவர்கள்தான் பெரிய கூட்டம். நான் தேவ சபையைச் சார்ந்தவன்' என்கிறார்கள். தேவன் அவர்கள் பெந்தெகொஸ்தே அல்லது அசெம்பிளியை சார்ந்தவரா என்றும் அல்லது அவர்களில் யார் பெரியவர் என்றும் கவலை கொள்வதில்லை (சகோ பிரன்ஹாம் தன் விரல்களை சொடுக்குகிறார்) இல்லை ஐயா, தேவன் தனிப்பட்ட நபர் மேல், அவரை நம்ப தைரியம் கொள்கிற எந்த மனிதன் மேலும், பெண்ணின் மேலும் பிரியமுள்ளவராயிருக்கிறார். 49. மோசே நியாயப்பிரமாணத்திற்கும், ஸ்தாபன சபைகளுக்கும் அடையாளமாயிருந்தான். மோசே தேவனை மகிமைப்படுத்துவதற்கு பதிலாக, ஜனங்களுக்கு முன்பாக தன்னையே மகிமைப்படுத்தினான். தேவன் அவனை விட்டு திரும்பினார். 50. சபையானது இன்றைக்கு தேவனை மகிமைப்படுத்துவதற்கு பதிலாக தங்களையே மகிமைப்படுத்த தொடங்கியிருக்கிறது. அவர்கள் பெரிய சபைகளையும், சிறந்த இருக்கைகளையும், சிறந்த இசைக் கருவிகளையும், சிறந்த சபைகளையும் அதிகமான அங்கத்தினர்களையும், பெற முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். தேவன் அதற்கு அதிகமாக கொடுப்பதில்லை. (சகோ பிரன்ஹாம் விரல்களை சொடுக்குகிறார்) நீங்கள் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். இந்த உலகத்தில் மகத்தான தேவாலயங்களை கொண்டிருப்பதைக் காட்டிலும், பண்டைய பாணியிலான, சுயாதீனமான, சுத்தமாக்கப்பட்டு, சத்தமிட்டு தேவனைத் துதித்து நல்ல நேரத்தை கொண்டிருக்கிற ஒரு சிறிய கூட்டத்தை நான் எங்கேயோ வீதிகளில் கொண்டிருக்க விரும்புகிறேன். ஆமென். அது சரியாயிருக்கிறது. தேவன் சபையுடன் (சபைக்காலங்களுடன்) ஈடுபடுவதை நிறுத்திக் கொண்டார். 51. இப்பொழுது கவனியுங்கள், மோசே தன்னையே மகிமைப்படுத்தி கொண்ட காரணத்தால், அவர் மோசேயை தண்டித்தார். 52. இன்றைக்கு சற்று கவனியுங்கள். இந்த பெரிய சபைகள், நீங்கள் அவர்களுடைய சபைக்கும், ஸ்தாபனங்களுக்கும் வர அவர்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு பிரசங்கியும் தங்களை முன்னிலைப்படுத்த எண்ணி, அவர் சென்று, "நல்லது, நான் மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கலாம், நான் இதுவாகவும், அதுவாகவும், மற்றதாகவும் இருக்கலாம்." சகோதரனே, நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறேன். என்கிறார். மனிதர்களுக்கும் ஸ்திரிகளுக்கும் தேவையானது கிறிஸ்துவே. ஒ! நான் அவர்களை காண தொடங்கும் பொழுது அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 53. சில காலத்திற்கு முன்பு நான் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு ஒரு சிறிய விடுமுறையிலிருந்தது - நினைவுக்கு வருகிறது. நான் அலாஸ்கா எல்லைப் பகுதியில் உள்ள வடக்கு திசைக்காடுகளுக்குள் இருந்தேன். அது ஹார்டாப் ரோட்டிலிருந்து ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தது. எல்லாவற்றையும் விட்டு தூரமாக, குதிரையின் மேல் ஆறு நாட்கள் சவாரி சென்றேன். நான் என்னுடைய குதிரையுடன் சவாரி செய்துகொண்டிருந்தபோது, நாங்கள் அங்கே கீழே சென்றடைந்தோம் ஒரு நாள் திடீரென அது பயப்பட்டது. நான் காடுகளுக்குள் போய்க்கொண்டிருந்தபோது அல்லது குதிரை ஓட ஆரம்பித்தபோது, ஒரு வெள்ளிமுனைக் (Grizzly bear) கரடி எழும்பி வந்தது. அதனால் அது பயப்பட்டது. அங்கே மிகப் பெரிய வானளாவிய எரிந்த மரங்கள் நின்றுகொண்டிருந்தது. அவைகள் சந்திரனுடைய வெளிச்சத்தில் வெண்மையாய் தோற்றமளித்தன. ஒ! அவைகள் வலிமையாகவும் கம்பீரமாகவும் தோற்றமளித்தன. அவைகளில் இருந்து ஜீவன் அனைத்தும் அவைகளை விட்டுப்போயிருந்தன. காற்றானது அங்கே அவற்றினூடாக வீசும் பொழுது துக்ககரமான ஊளையிடுதலை நான் கேட்டேன். உங்களுக்கு தெரியும் அது அந்த எல்லா பழைய மரங்களும் எழுப்பும் மரண ஓலமாக இருக்கிறது. (and all them old trees would do is just squeak and squawk, and squeak and squawk) 54. அங்கே யோவேல் தீர்க்கதரிசன புத்தகத்தில் "பச்சை புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது. வெட்டுக்கிளி விட்டதை பட்டை புழு நின்றது" என்று கூறப்பட்டுள்ளது. அந்த சபைகள், ஓ! எந்த சந்தேகமுமில்லாமல், அந்த மரங்களைப் போல மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே என்று அவைகள் ஒரு காலத்தில் பெரிய ஜீவிக்கின்ற சிலைகளாக இருந்தன. ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன், இவ்வுலகத்தின் அக்கினியும், அக்கினியின் உக்கிரமும் அவைகளுடைய எல்லாம் பட்டைகளையும் சுட்டெரித்து போட்டிருக்கிறது. அவைகள் அங்கே எழுப்பப்பட்டிருக்கிற ஒரு கூட்ட பெரிய கல்லறைகளைப் போல நின்று கொண்டிருக்கின்றன. அவைகளில் எந்த ஜீவனும் இல்லை. ஆமென். அது சரியாயிருக்கிறது மேலும் பரலோகத்தில் இருந்து பலத்த காற்று அடிக்கிற முழக்கம் வரும்பொழுது, அதற்கு எதிராக பேசி, துக்ககரமான சத்தத்தை மட்டுமே கீச்சீடிகிறது. அல்லேலூயா! நமக்கு தேவையாயிருப் பதெல்லாம் யாரோ ஒருவர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 55. நான் அங்கே வளர்ந்து கொண்டிருந்த சிறிய மரங்களை கவனித்தேன். அவைகள் காற்றுக்கு தங்களை விட்டு கொடுத்து உற்சாகமாக வளைந்து கொடுத்து நல்ல நேரத்தை ஒரு கொண்டிருந்தது. நான் "அது, தேவன் அனுப்பின பண்டைய கால பரிசுத்த ஆவியின் எழுப்புதலை எனக்கு நினைவுக்கு கொண்டு வருகிறது" என்று கூறினேன். அல்லேலூயா! 56. அற்புதங்களும் அடையாளங்களும் சபைக்குள் நடக்க தொடங்கும் பொழுது அந்த பெரிய பழைய சபைகள் 'அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன, அது மதவெறி, நான் அந்த காரியங்களை விசுவாசிப்பதில்லை" என்று புலம்புகின்றன. அந்த காற்றானது கீழே வீசுகிறது. அதே காற்று ஒன்றிற்கு புலம்பலை உண்டாக்குகிறது, மற்றவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. அல்லேலூயா! 57. ஒவ்வொருமுறையும் நீங்கள் அந்த மரத்தை அசைத்த பொழுது, அது ஒரு அசைவை பெறுகிறது, அது ஆழமாக சென்று உறுதியாகப் பிடிப்பதற்கேதுவாக வேர்களை தளர்த்துகிறது. அல்லேலூயா! இன்றிரவு நமக்கு அவசியமாய் இருப்பதெல்லாம் ஒரு நல்ல பண்டையகால பரிசுத்த ஆவியின் அசைவு, ஆழமாக செல்வது, (தேவனுக்கு மகிமை) பண்டையகால பானியில் தேவனை இறுகப்பிடித்து கொள்ளுதல். எல்லாவிதமான அசைவுகளையும் இழுப்புகளையும் பரிசுத்த ஆவி உங்களுக்கு செய்கிறது. அவர் ஆழமாகத்தோண்டி, இறுகப்பிடிக்க, சில அனுபவங்களைக் கொடுக்கிறார் ஆவியின் வரங்களின் அனுபவங்கள், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நான அனுபவங்கள் சுகமளித்தலின் அனுபவங்கள். அல்லேலூயா! கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக வேறூன்றி கொண்டிருக்கும்படியாக அவர் வேர்களை சுற்றியுள்ள மண்ணை நிலை தளர்த்திக் கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு கடினமாக காற்று வீசுகிறதோ அந்த அளவுக்கு அது கிறிஸ்துவில் உங்களை நங்கூரமிட செய்கிறது. 58. சபையாகிய அவள் சத்தமிட்டு புலம்ப விரும்பினால் புலம்பட்டும். "அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன" என்று சொல்ல விரும்பினால் அவள் சொல்லிக்கொள்ளட்டும். அவர்கள் எப்படியாயினும் மரித்தவர்களாய்தான் இருக்கின்றனர். ஓ. அவர்கள், "நாங்கள் சபையாயிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள். அந்த மரங்களும் அப்படித்தான் கூறின. 59. ஆனால் அந்த மரங்களை பாருங்கள். அவைகள் மீது பட்டை இல்லை, எல்லாப் பட்டைகளும் எரிந்து வெந்து போய் இருக்கின்றன. அந்தக் காரணத்தினால் அவைகள் ஜீவனை மேலே சுமந்து போக முடியவில்லை. அந்த மரங்கள் பட்டைகளை உடையதாயிருந்தால் ஜீவனை மேலே சுமந்து சென்று அவைகள் மீண்டுமாக ஜீவித்திருக்கும். அவைகளின் மீது எந்த பட்டைகளும் இருக்கவில்லை. எல்லா பட்டைகளும் அங்கிருந்து போய், அவைகளுடைய சடங்குகளையும் அது போன்ற இன்ன பிற காரியங்களையும் உண்டாக்கிக்கொண்டன. ஆகையால். காற்று அடிக்கும் பொழுது ஒரு துக்ககரமான புலம்பலின் சத்தத்தை தவிர வேறொன்றும் அங்கில்லை. 60. மற்றவர்கள் அதே விதமாக தொடர்ந்து சென்று கொண்டிருந்த பொழுது, தேவன் அதே விதமான காற்றை அனுப்பினார். சொற்ப அளவேயுள்ள அந்த சிறு சபையானது எழும்பி வந்து, அவர்கள் அந்த காற்றோடு ஒரு மகத்தான நேரத்தைக் கொண்டிருந்தனர். ஒ! என்னே! தேவனுடைய வல்லமை சபையில் நமக்கு தேவையாயிருக்கிறது. 61. இப்பொழுது. மோசே மரித்து, அவர்கள்புறப்பட்ட பொழுது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி செல்ல துவங்கினார்கள். நமக்கு அதிக நேரமில்லாத காரணத்தால் வேகமாக செல்வோம். 62. ஆனால், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி புறப்பட்டனர். யார் அவர்களுடைய வழியில் குறுக்கிட்டது? ஆனால் ஒரு நாள் அங்கே இருந்த அந்த ராஜாவாகிய பாலாக் அங்கே வந்து கொண்டிருக்கிற எபிரேயர்களின் கூட்டத்தை குறித்து வெறுப்புணர்வை பெற்றான். தேவன் அவர்களோடு இருந்தார் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே பாலாக்கின் வேலைக்காரன் அங்கே சென்று பாலாக்கின் நிமித்தமாக அவர்களை சபிக்கும்படிக்கு ஒரு தீர்க்கதரிசியை அழைப்பித்தான். பிலேயாம் என்ற பெயரில் பாலாக்குக்கு ஒரு தீர்க்கதரிசி இருந்தான். தேவன் அவனிடம் போக வேண்டாம் என்று சொன்ன பிறகும் பிலேயாம். ஒரு சிறிய கழுதையை சேனம் பூட்டினான். அவன் இரண்டு வேலைக்காரர்களுடன் அவனுடைய கழுதையில் சவாரி செல்ல துவங்கினான் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவன் இஸ்ரவேலை சபிக்க அங்கு போய்க்கொண்டிருந்தான். "நிச்சயமாக. உமக்காக நான் அந்த பரிசுத்த உருளையர் கூட்டத்தை பார்த்து கொள்வேன். நான் அவர்களை சபிப்பேன்". ஆகவே அவன் கழுதையின் மேல் அங்கே கீழே சென்றான். முதலாவது காரியம் என்னவென்றால்..... 63. பரிசுத்த ஆவியானவர் உருவின பட்டயத்துடன் பாதையில் நிற்பதை கழுதை கண்டது. அந்த பிரசங்கிக்கு இருந்ததைக் காட்டிலும், அந்த கழுதைக்கு மேலான ஆவிக்குரிய பார்வை இருந்தது. அது வயல்வெளியில் ஓடி, அவருக்காக பிரசங்கியின் பாதத்தை நெருக்கியது. நமக்கு கொஞ்சம் இன்றைக்கு அதிகமாக கழுதை சவாரி அவசியமாயிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறதில்லையா? அது சரிதான். ஆம். அங்கே அது வருகிறது. அது கர்த்தருடைய தூதன் பாதையில் நிற்பதை கண்ட பொழுது வயல்வெளியில் ஓடியது. 64. ஆகவே அடுத்த முறை கர்த்தருடைய தூதன் (பரிசுத்தர், பரிசுத்த ஆவியானவர்) குறுகிய பாதைக்கு சென்று மறுபடியும் அங்கே நின்றார். பிறகு முதலாவது காரியம் என்னவென்றால், அந்த கழுதை துள்ளிக்குதிக்க ஆரம்பித்து அவரை விட்டு விலக முயற்சித்து கீழே படுத்துக்கொண்டது. (பிலேயாம்) அவன் அதை உதைக்க துவங்கி ஒரு தடியினால் அடித்தான். கழுதை அவனிடம் திரும்பி மனிதபாஷையில் பேசியது. அது "எல்லாக்காரியங்களிலும் நான் நன்றாக உம்மை சேவிக்கவில்லையா?" என்று கேட்டது. கழுதை என்ன சொல்லிக் கொண்டிருந்தது என்று கவனிக்காதபடிக்கு தீர்க்கதரிசி இன்னும் உணர்வில்லாதவனாய் இருந்தான். ஓ, என்னே! 65. பேசமுடியாத ஒரு கழுதையின் நாவை பேசும்படி தேவனால் உபயோகிக்க முடியுமானால், தங்களை தேவனுக்கு சரணடைய செய்யும் ஒரு மனிதன் அல்லது ஒரு பெண்ணை நிச்சயமாக தேவனால் உபயோகிக்க முடியும். அல்லேலுயா! 66. இப்பொழுது முதல் காரியம், பிரசங்கியின் கண்களில் இருந்து செதில்கள் விழுந்தன. பிறகு அவன் அங்கே உற்றுநோக்கி, என்ன காரியம் என்பதை கண்டான். பரிசுத்த ஆவியானவரோ அல்லது கர்த்தருடைய தூதனோ அங்கே அந்த பாதையில் நின்றார். 67. அவன் கீழே சென்று உறுதியாக அந்த ஜனங்களை சபிக்கப் போவதாக எண்ணினான். ஆகவே, நாம் சற்றே திரும்பி பார்த்தால், இங்கே யூதாவிலே அதனுடைய அருமையான காட்சியை நாம் காண்கிறோம். கவனியுங்கள். அவன் அங்கே கீழே சென்ற பொழுது, இப்பொழுது பிலேயாமை கவனியுங்கள். பிலேயாமுக்கு இஸ்ரவேலை காண்பிக்கும்படி பாலாக் போய்கொண்டிருந்தான். அவன் இஸ்ரவேலின் ஒரு பாகத்தை பிலேயாமுக்கு காண்பித்தான், மோசமான பகுதியை மட்டுமே. பிலேயாம் ஒரு தீர்க்கதரிசி யாயிருந்தான். ஆகவே அவன் சென்று அவனுடைய பலிபீடத்தை கட்டுகிறான். 68. இன்றைக்கும் சரியாக அந்தவிதமாகத்தான் பிசாசு செய்கின்றான். அவன் உங்களுக்கு மோசமான பகுதியையே காட்டுகிறான். அதை தான் பிசாசு இந்த நவீன இறையியல் பிரசங்கிகளுக்கு காட்டுகிறான். "இப்பொழுது, இங்கே பாருங்கள், உங்களுக்கு தெரியும் ஜான் டோ இங்கே வசித்து வந்தார், அவர் குறிப்பிட்ட ஒரு நபருடைய மனைவியுடன் ஓடிவிட்டார், நாம் போதுமென்ற அளவுக்கு அந்த பரிசுத்த உருளையர்கள் கூட்டத்தை பெற்றிருந்தோம்," என்று சொல்லுகிறார்கள். அவனுடைய ஸ்தாபனத்தில் இதே காரியத்தை செய்த சிலரை பற்றி அவன் எண்ணுவதில்லை. ஆனால் அவர்கள் அதை மறைக்கமுடியும். அது சரி. 69. ஆனால், கவனியுங்கள் அவன் (பாலாக்) இஸ்ரவேலைக்குறித்து அநேக காரியங்களை அவனுக்கு காண்பித்தான், பிறகு அவனை பின்பாகத்திற்கு அழைத்துவந்து இங்கேயும் அநேக காரியங்களை அவன் காண்பித்தான். ஆனால் அவன் ஒரு இடத்திற்கு வந்த பொழுது பிலேயாம் "நிச்சயமாக இஸ்ரவேல் தவறு செய்திருந்தால்....." என்று எண்ணினான். அவர்கள் தவறு செய்தார்கள். அவர்கள் தேவனுடைய நாட்காட்டியின்படி ஏறக்குறைய எல்லாவற்றையும் தவறாக செய்திருந்தார்கள். ஆனால் அந்த அளவு தவறு செய்திருந்த ஒரு ஜனத்தை நிச்சயமாக பரிசுத்த தேவன் சபிப்பார் என்று பிலேயாம் எண்ணினான். அவன், "நிச்சயமாக தேவன் அதை செய்வார்" என்று எண்ணினான். ஒவ்வொரு முறையும் அவன் அவர்களை சபிக்க முயற்சித்த பொழுது, அவன் அவர்களை ஆசீர்வதித்தான். அவன் சென்று அவனுடைய உவமையையும் சால்வையும் எடுத்து அதை எறிந்து இது போன்று அவன் தீர்க்கதரிசனத்தை சொல்லும் பொழுது சபிப்பதற்கு பதிலாக அது அவர்களுக்கு மீண்டும் ஒரு ஆசிர்வாதமாக இருக்கும், "ஒ இஸ்ரவேலே உன்னுடைய கூடாரங்கள் எவ்வளவு நீதியுள்ளவைகளாயிருக்கிறது, அவர்கள் எவ்வளவு மகத்தானவர்கள்' அது சாபத்திற்கு பதிலாக ஆசீர்வாதமாக இருந்தது. ஆகவே அவன் அங்கு சென்ற பொழுது, தேவன் ஏன் அவர்களை சபிக்கவில்லை என்ற காரணத்தை காணமுடியாதபடிக்கு அவன் பணத்தின் மேல் மிகவும் பைத்தியமாயிருந்தான். 70. எதை பிலேயாம் காண தவறினானென்றால், இன்றைக்கு நவீன பிரசங்கிகளும், நாகரீகமான ஜனங்களும் காணத் தவறுகிற அதே பரிசுத்த ஆவியின் சபையாயிருக்கிறது. அவர்கள் "இவர்களில் நிறையபேர் இது, அது, மற்றது என்று தங்களை அழைத்து கொள்கிறார்கள் என்று நான் அறிவேன்" என்கிறார்கள். சகோதரனே நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள், "இவர்கள் இதனுடன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள், இவர்கள் அதை செய்திருக்கிறார்கள், இதை செய்தார்கள்" என்கிறார்கள். அவர்கள் அதை தவறாக செய்திருக்கிறார்கள் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன் அது உண்மை. 71. ஆனால் அங்கே பிலேயாம் வெண்கலசர்ப்பத்தையும் அவர்களோடு அடிக்கப்பட்ட கன்மலை பாவநிவாரணம் செய்துகொண்டே இஸ்ரவேலுக்கு முன்பாக போவதையும் காணத் தவறினான். அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல், தேவனுடைய அழைப்பாயிருந்தது. அவர்கள் தேவனுடைய ஜனங்களாயிருந்தார்கள். அல்லேலுயா! தேவன் அவர்களை வேறுபிரித்து, அவர்களை அழைத்திருந்தார். ஒரு அடிக்கப்பட்ட கன்மலையையும், ஒரு சர்ப்பத்தையும் (பாவநிவாரணம்) அவர்களுக்கு முன்பாக வைத்திருந்தார். பிலேயாம் அதை காணத் தவறினான். ஒரே ஆவியினால் நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு அந்த சரீரத்தின் அங்கத்தினர்களாயிருக்கிறோம் என்னும் அடிக்கப்பட்ட கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியின் வல்லமையையும் இந்த நாளில் அந்த நவீன பிரசங்கி காணத் தவறுகிறான். அதைதான் இந்த நாகரீகமான மனிதன் அங்கே காண தவறினான். பரிசுத்த ஆவியின் சபை முன் செல்வதற்கு முன்பாக, அவர்களோடு உடன்படிக்கை செய்த அடிக்கப்பட்ட கன்மலையும் வெண்கல சர்ப்பமும் சபைக்கு முன்பாக போய்க்கொண்டிருக்கிறதை நவீன சபைகள் காணத்தவறுகின்றன. 72. மோசேயின் ஸ்தானம் முடிவுற்றபோது யோசுவா அந்த ஸ்தானத்திற்கு வந்தான். யோசுவா எல்லா நேரங்களிலும் பாளையத்தில் இருந்துவந்தான். யாத்திரையை துவங்கினவர்களில் அவனும் காலேபும் மாத்திரம் அங்கே சென்றார்கள். அவிசுவாசத்தின் நிமித்தமாக அந்த முழு தலைமுறையும் மரித்துப்போனது. தேவன் ஒரு புதிய தலைமுறையை துவங்கினார். அதை யோசுவா வழி நடத்துகிறவனாயிருந்தான், அவனும் காலேபும். 73. இப்பொழுது கவனியுங்கள் சபையானது தோல்வியடைந்த பொழுது, எல்லாநேரமும் அந்த காரியம் சபைக்குள்ளிருந்தது, ஆவியின் வரங்கள், ஆவியின் ரூபகாரப்படுதலானது சபையை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்கிறதாயிருக்கிறது. ஆனாலும் அது அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. 74. அங்கே அந்த பழைய நாட்களை பின்னோக்கி பாருங்கள், அவர்கள், அவர்கள் தங்களுடைய கூடாரங்களை போட்டார்கள். அங்கே அக்கினிஸ்தம்பமானது அவர்களை நடத்தியது. ஒவ்வொரு முறையும் அக்கினிஸ்தம்பமானது முன்னோக்கி சென்றபொழுது, அவர்களும் அதனுடன் சென்றார்கள். அது கூடாரங்களின் மேல் தங்கியது. அது இரவு பத்து மணியாயிருந்தாலும், மதியம் இரண்டு மணியாயிருந்தாலும் ஒரே நேரத்தில் ஆயிரம் எக்காளங்கள் ஊதப்பட்ட போது, ஒவ்வொரு இஸ்ரவேலனும் அவனுடைய கூடாரங்களின் முளைகளை பெயர்த்துகொண்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அக்கினிஸ்தம்பத்தை பின் தொடர்ந்தான். 75. ஒ. இன்றைக்கு அது ஒரு அருமையான காரியமாயிருக்கும்! அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தை பின் தொடர்ந்தார்கள். எங்கே அக்கினிஸ்தம்பம் நின்றதோ அதற்கு கீழே கூடாரத்தை போட்டார்கள். இப்பொழுது, சபையானது அக்கினி ஸ்தம்பத்தை பின் தொடர்கிறதை இழந்து விட்டிருக்கிறது. 76. மார்டின் லூத்தரின் நாட்களில், ஆயிரத்து ஐநூறு வருடம் இருளின் காலங்களுக்கு பிறகு அக்கினிஸ்தம்பம் அசைவதை மார்டின் லூத்தர் கண்டார். அவர் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்து அக்கினி ஸ்தம்பத்தை பின் தொடர்ந்து அவர்களில் ஆயிரக்கணக்கானவர்களை வெளியே கொண்டு வந்தார். 77. பிறகு மார்டின் லூத்தர் அக்கினி ஸ்தம்பத்தின் கீழே கூடாரத்தை எழுப்பினார். முதலாவது காரியம் நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால், அவர் அங்கே இருந்தபொழுது லூத்தரன் சபை என்று அழைக்கப்பட்ட ஒரு பெரிய அமைப்பை உண்டாக்கினார். ஒரு நாள் அக்கினிஸ்தம்பமானது மீண்டும் முன்னோக்கி செல்ல ஆரம்பித்தது, ஆனால் மார்டின் லூத்தர் தன்னை ஸ்தாபித்துக்கொண்ட காரணத்தினால் முன்னோக்கி அவர் அங்கேயே தங்க செல்ல முடியவில்லை. வேண்டியதாயிருந்தது. அது சரி. 78. அக்கினிஸ்தம்பம் நகர்ந்து வெளியே சென்றது, இங்கிலாந்தில் ஜான் வெஸ்லி என்ற பெயரில் ஒரு சிறிய நபர் அதைக் கண்டார். (மார்டின் லூத்தர் "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்றார்). இப்பொழுது ஜான் வெஸ்லி"இயேசுவானவர் ஜனங்களை சொந்த இரத்தத்தினால் பரிசுத்தம் செய்யும்படிக்கு நகர வாசலுக்கு புறம்பே பாடுபட்டார்" என்று கூறினார். வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலை கண்டார். ஆனால் லூத்தரால் ஸ்தாபித்துக் கொண்ட காரணத்தினால் செல்ல முடியவில்லை. 79. சகோதரனே, உங்களுக்கு நான் இதை கூறட்டும். தேவன் வேதாகமத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சபையை கொண்டிருந்த தேயில்லை. அது உபதேசமாயிருக்கிறது. கத்தோலிக்க சபை தங்களை "தாய் சபை" என்று கூறுகிறது. அவர்கள் தாய் சபைதான். வெளிப்படுத்தின விசேஷமும் இதே காரியத்தை கூறுகிறது, அவள் ஸ்தாபனங்களின் தாயாயிருக்கிறாள். அது சரி. முதலாவது ஸ்தாபிக்கப்பட்ட அவள்தான். இவர்கள் அதிலிருந்து வந்த சிறிய-சிறிய குமாரத்திகளாயிருக்கிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 17-ஐ வாசியுங்கள். அடுத்த வாரத்தில் நாம் அதற்குள் செல்வோம். அது சரி. கவனியுங்கள். 80. பிறகு அவர்களால் முன்செல்ல முடியவில்லை, ஆகவே ஜான் வெஸ்லி அக்கினி ஸ்தம்பத்தை கண்டு அதற்கு பின் சென்றார். அவர் ஒரு பெரிய.... அவர் தேசங்களை இரட்சித்தார். மூன்று அல்லது நான்கு தேசங்கள் ஒழுக்கக்கேட்டில் இருந்தது. ஜான் வெஸ்லி அக்கினி ஸ்தம்பத்தைக்கண்டு வெஸ்லியின் எழுப்புதலை துவங்கினார். அது உலகமெங்கிலும் வேகமாக பரவியது. அவரும் ஆஸ்பரியும் இங்கே வந்து அந்த நாளில் அவர்களை இரட்சித்தார்கள். 81. பிறகு முதலாவது காரியம் என்னவென்றால், ஜான் வெஸ்லி தன்னை இறுக்கமாக ஸ்தாபித்து கொண்டார், அக்கினி ஸ்தம்பம் மீண்டும் முன்னோக்கி செல்ல தொடங்கியது. அவர் ஸ்தாபித்து கொண்ட காரணத்தினால் முன்னோக்கி செல்ல முடியவில்லை. பெந்தெகொஸ்தே ஜனங்கள் அக்கினி ஸ்தம்பத்தை கண்டு, அவர்கள் பின்சென்றார்கள். அது சரி. அதன்பிறகு லூத்தரோடுகூட சேர்த்து வெஸ்லியையும் தேவன் உபயோகிக்கவில்லை. எல்லாம் சரி. இப்பொழுது முதலாவது காரியம் என்னவென்றால், அவர்கள் எழுப்புதலாகிய ஒரு மகத்தான எழுப்புதலையும் வரங்கள் திரும்ப பெந்தெகொஸ்தே அளிக்கப்படுதலையும் மற்றும் அது போன்ற இன்ன பிற காரியங்களையும் பெற்றிருந்தார்கள். 82. இப்பொழுது முதலாவது காரியம் என்னவென்றால், அக்கினி ஸ்தம்பம் மீண்டும் முன் செல்ல ஆரம்பித்தது. ஆனால் பெந்தெகொஸ்தே சபை முன் செல்ல முடியவில்லை, அது மிகவும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. சகோதரனே, அது காயப்படுத்துகிறது. அது நல்லதாயிருக்கிறது. அப்படியில்லையா? அது மிகவும் ஸ்தாபிக்கப்பட்டு, இறுகிப்போய், நகர முடியாத நிலையிலிருக்கிறது. அது சரி. அது உண்மை. ஆனால் சகோதரனே. அக்கினிஸ்தம்பம் வெளியே சென்று கொண்டிருக்கிறது. அதனுடன் செல்லும் மக்கள் அங்கே இருக்கிறார்கள். அல்லேலூயா! நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு போகிறவர்களாயிருக்கிறோம். ஆம் ஐயா. 83. மோசே, தேவன் சொன்னதை செய்யத் தவறின பொழுது யோசுவா அக்கினி ஸ்தம்பம் நகர்வதைக் கண்டு "பிள்ளைகளே வாருங்கள், நாம் பாதையில் இருக்கிறோம்" என்றான். அவன் அவர்களை யோர்தான் வரைக்கும் கொண்டு வந்தான். ஒ! நான் அதை நினைக்கும்பொழுது, எவ்வளவு அழகாயிருக்கிறது! அவன், "நாம் கடப்பதற்கு முன்பு, சில வேவுக்காரர்களை அங்கு அனுப்புவோம்," என்றான். 84. அந்த வேசியின் காரியம் உங்களுக்கு தெரியும், ராகாப், இல்லை, வேசியாகிய ராகாப். எப்படியாக அவள் சிவப்பு துணிகளை கீழே தொங்கவிட்டு அவளுடைய குடும்பத்தை இரட்சித்தாள். விசுவாசத்தினால் அவள் தன்னையும், தன் வீட்டாரையும் இரட்சித்து கொண்டாள். அவளுடைய வாசலில் சிவப்பு கோடு இருந்ததினிமித்தம், அவளுடய வீடு தவிர மற்ற எல்லா மதில்களும் இடிந்து விழுந்தன. 85. சங்காரதூதன் வருகிறதை அன்றிரவு நாம் பார்த்தது போல, இந்த பெரிய அசைவுக்கு முன்பாக உங்களுடைய வாசலின் மேல் ஒரு சிவப்பு கோடு அங்கே இருக்கிறதா? அவர் "இன்னும் ஒரு தரம் நான் பூமியை மாத்திரம் அல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன்," "அசைவில்லாத இராஜ்யத்தை நாம் பெறுகிறோம்," என்று எபிரெயரில் கூறுகிறார். அது சரி. இப்பொழுது கவனியுங்கள், அந்த நேரத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! 86. நான் இளம் தலைவனாகிய யோசுவாவை காண்கிறேன். தேவன் அவனை சந்தித்து, "நீ பயப்படாதே" என் ஊழியக்காரனாகிய மோசே மரித்துப்போனான், ஆனால் நீ எழுந்து யோர்தானை கடந்து செல். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருப்பேன், பயப்படாதே, பலங்கொண்டு திடமனதாயிரு" என்றார். அந்த சிறிய தாழ்மையுள்ள நபராகிய அந்த யுத்த வீரன் சுற்றிலும் நடப்பதை என்னால் காணமுடிகிறது. அவன்..... அவன் இஸ்ரவேலரெல்லாரும் ஒன்று கூடி வரும்படி அழைப்புவிடுத்து யோர்தானை நோக்கிப்பார்த்தான். அது ஏப்ரல் மாதம், அறுப்பின் காலமாயிருந்தது. யூதேயாவின் மலைகளில் பனி உருகி ஜலம் பிரவாகித்து பெரிய ஆறாக வந்து கொண்டிருந்தது. 87. சமீபத்தில் நம்முடைய சகோதரர்களில் சிலர் அங்கே இருந்தார்கள். அதனுடைய படக்காட்சி எங்களிடம் இருக்கிறது என்று நான் உங்களிடம் கூறினேன். அங்கே அவர்கள் ஒரு கூட்டத்தை கொண்டிருந்தார்கள். மேலும் நான் ஒரு கூட்டத்திற்கு அங்கே செல்வதற்காக அங்கே சென்று ஆயத்தம் செய்தார்கள். அவர்கள் அங்கே நாற்பதுபேராயிருந்தார்கள். அவர்கள் அந்த இடத்தை அடைந்தபொழுது, சுற்றிலிருக்கும் எல்லாற்றையும் தகர்ப்பது போல கூச்சலிட்டார்கள். இயேசு யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெற்ற இடத்திற்கு அவர்கள் சென்றபொழுது, ஒவ்வொருவரும் கூச்சலிட்டு, தண்ணீருக்குள் குதித்து, மீண்டும் ஒருவருக்கொருவர் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஒரு மனிதன் அதை நினைக்கும்பொழுது ஏதோவொன்று அந்த மனிதனுடைய ஆத்துமாவை உடைக்கிறதாயிருக்கிறது. 88. நசரேயர்களாகிய உங்களில் சிலர் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். பட்டிராபின்சன் பழைய மாடல் T போர்ட்-ல் இதை சென்று கொண்டிருந்தார். அவர் இஸ்ரவேல் புத்திரர் வந்த அதே யாத்திரையின் பாதையில் போய்கொண்டிருந்தார். அவர் "நிறுத்துங்கள், என்னால் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது, தேவனுக்கு மகிமை" என்றார். அவர் அங்கே காரை சுற்றி சுற்றி சென்று தன்னால் முடிந்தவரை உரக்கக்கத்தினார். அவர் காருக்குள் வந்து "பயணத்தை மீண்டும் துவங்குங்கள் போகலாம்" என்றார். 89. அதைக்குறித்து ஏதோவொன்றிருக்கிறது. அல்லேலூயா! அது என்னவாயிருக்கிறது? ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. சகோதரனே, இங்கே ஒரு ஆழம் இருக்கும் பொழுது, அதற்கு பதிலளிக்க அங்கே ஒரு ஆழம் இருக்கிறது என நம்புகிறேன். இப்பொழுது முன்னோக்கி சென்று தேவனுக்காக ஏதோவொன்றை செய்ய ஒரு மனித இருதயத்தில் பசி இருக்கும் வரை நம்மிடத்தில் வந்து நம்மை உந்தி தள்ளுகிற ஏதோவொன்று அங்கே இருக்கிறது என்பதை அது காட்டுகிறது. சகோதரனே! நாம் சமீபமாயிருக்கிறோம். கவனியுங்கள்! இன்றிரவு சரியாக இப்பொழுது நிர்ணயித்திருக்கிற காரியங்களுக்கு முன்பாக நாம் செய்த தேவன் செய்ய காரியங்கள் மிகச் சிறியதாக உள்ளது என்று கர்த்தருடைய நாமத்தினால் நான் இதை விசுவாசிக்கிறேன். நீங்கள் மகத்தான காரியங்களை கேட்க போகிறீர்கள். 90. நான் இப்பொழுது யோசுவாவை காண்கிறேன். அவன் அங்கே நின்று கொண்டிருக்கிறான். அவன் எப்படி அந்த ஆற்றை கடக்க போகிறான்? அவர்களை கவனியுங்கள். அவர்கள் அந்த நாட்களில் மரங்கள் அல்லது இரும்பு மற்றும் உபகரணங்களால் கட்டுபவர்களையும் பாலங்கள் கட்டுகிற பெரிய பெரிய பாலம் தச்சர்களையும் கொண்டிருக்கவில்லை. அவர்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை. ஆனால் யோசுவா சகதி நிறைந்த யோர்தானை பார்த்தான், அவன் பின்னாக திரும்பிப்பார்த்து ஆயிரம் பல்லாயிரக்கணக்கான யூதர்களை அவன் கண்டு, "தேவன் ஒரு வழியை உண்டாக்குவார்" என்றான். தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்தார். 91. தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்தால், அவர் அவருடைய வார்த்தையை காத்துக் கொள்வார். தேவன் சுகமளிப்பதாக உனக்கு வாக்குத்தத்தம் செய்திருந்தால், அவர் அதை செய்வார். தேவன் உனக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பதாக வாக்குத்தத்தம் செய்திருந்தால் அவர் அதை செய்வார். நீங்கள் வந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு அவரை விசுவாசியுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். அது சரி. நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவீர்கள். தேவன் அவருடைய வார்த்தைக்கு கடமைப்பட்டவராயிருக்கிறார். அவர் தனது வார்த்தையை திரும்ப பெற முடியாது. அவர் தேவனாய் இருப்பதற்கு அவருடைய வார்த்தையை காக்க வேண்டும். அவர் காக்க வேண்டும். 92. இப்பொழுது கவனியுங்கள் யோசுவா அங்கே நின்று சுற்றிலும் நோக்கிப்பார்த்தான். ஒ! என்னே! 93. நாம் இந்த நாட்களில் ஒன்றில், நிச்சயமாக அங்கே நிற்கபோகிறோம். நாம் பாதையின் முடிவாகிய சகதி நிறைந்த யோர்தானில் நிற்கபோகிறோம்...... நண்பனே, இன்றிரவு ஆரோக்கியமாயிருக்கிறீர்கள். அங்கே உங்களுக்கு எந்த தொல்லையும் இல்லாமலிருக்கலாம். ஆனால் இந்த நாட்களில் ஒன்றில் மருத்துவர் உன்னுடைய அறையில் இருப்பார், "எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது, என்பார். நாடிதுடிப்பானது குறைந்து கொண்டேயிருக்கும். அந்த இளமையான நாட்கள் சென்று விட்டிருக்கும். ஏதோவொன்று தாக்கியிருக்கிறது. அந்த மருத்துவர், "மன்னித்து விடுங்கள். வேறு எதுவும் செய்ய முடியாது," என்பார். அவள் ஒரு வாலிப ஸ்திரீயாயிருக்கிறாள், சிறுவனோ, கிழவனோ, வாலிபனோ அது எதுவாக இருந்தாலும் "அங்கே வேறு எதுவும் அல்லது செய்ய முடியாது, என்று மருத்துவர் சொல்வார். நீங்கள் அறையைவிட்டு கடந்து செல்லும்பொழுது, நீங்கள் மரணத்தின் குளிர்ந்த ஆவிகள் (COLD VAPORS OF DEATH) அறைக்குள் மிதப்பதை உணர்வீர்கள், அந்த யோர்தான் சேறும் சகதியுமாக காணப்படும். ஓ! என்னே! 94. பிறகு நீங்கள் யோசுவாவை போல் இருப்பீர்கள். அவன் மலையின் மேல் உட்கார்ந்து அங்கே நோக்கி பார்த்தான். அங்கே அவர்களுக்கு இடையே செல்வதற்கு உடன்படிக்கைபெட்டி அங்கே இருந்தது. அவன் அவர்களுடைய தொல்லைகளுக்கும் அவனுக்கும் இடையில் செல்ல ஏதோவொன்றை உடையவனாயிருந்தான். 95. நாம் இன்றிரவு மரணத்திற்கும் நமக்கும் இடையே நிற்கிற கிறிஸ்து இயேசு என்னும் பேழையை பெற்றிருக்கிறோம். ஏதோவொரு நாட்களில் நம்முடைய சரீரத்திலிருந்து கடைசி மூச்சை விடும் பொழுது, நான் அந்த ஆற்றண்டையில் ஓடிச் சென்று, "யோர்தானே, வழியை விடு, நான் என்னுடைய கர்த்தரை காணப்போகிறேன்", என்று கூற விரும்புகிறேன். மரண இருளின் பள்ளத்தாக்குகளின் வழியாக விடிவெள்ளி நட்சத்திரம் வெளியே வந்து வழியை ஒளிரச்செய்யும், பரிசுத்த ஆவியானவர் யோர்தானின் குறுக்கே இரண்டு பளபளப்பான சிறகுகளை விரித்து, சோர்வடைந்த நம்முடைய ஆத்துமாக்களை ஒரு சிறந்த தேசத்திற்குள் கொண்டு செல்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென்... இப்பொழுது இதை கவனியுங்கள். 96. தேவன் தன்னுடன் இருந்தார் என்பதை யோசுவா அறிந்திருந்தவனாய், உடன்படிக்கை பெட்டியை எடுத்து, ஜனங்களை நோக்கி, "இங்கே நீங்கள் ஒன்றுகூடி உங்களை பரிசுத்தப்படுத்தி கொள்ளுங்கள், ஆயத்தமாகுங்கள், நாளைக்கு நீங்கள் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் என்று கூறினான். 97. அவன் ஆசாரியர்களுக்கு முன்பாகவும் சபையோருக்கு முன்பாகவும் பேழை முதலில் செல்லும் வரை அவர்களை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்க செய்தான். பின்னர் அவன் ஆசாரியர்களை அழைத்தான், அவர்கள் தேவனை முதலில் வைத்தனர். 98. சகோதரனே, சகோதரியே நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனை முதலில் வைத்தால் நீங்கள் வெற்றியடைவீர்கள். தேவனை முதலில் வையுங்கள். 99. அவர்கள் பேழையை சுமந்துகொண்டு போனார்கள். ஆசாரியர்களுடைய கால்கள் தண்ணீரில் பட்டமாத்திரத்தில் தேவன் யோர்தானை பின்னிட்டு திரும்பச்செய்தார். அது பின்னிட்டு திரும்பியது. அவர் ஒரு ஸ்தம்பத்தில் நின்றார், இஸ்ரவேலர் வறண்ட நிலத்தின் மேல் கடந்து சென்றார்கள், பிறகு அவர்கள் அங்கே பாளையமிறங்கினார்கள். 100. ஓரிரு நாட்களுக்குப்பிறகு யோசுவா சுற்றிலும் நடந்து கொண்டிருந்தான். அந்த இடத்தை நோக்கி பார்த்தான். எரிகோவை சுற்றிலுமிருந்த பாலஸ்தீனவாசிகள் பற்றி தேவன் அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தியிருந்தபடியால் அங்கே எல்லாம் மூடப் பட்டிருந்தது. யோசுவா நடந்து கொண்டிருந்தான். அவன் அங்கே நோக்கிப்பார்த்து யாரோ ஒருவரைக்கண்டு, அவனுடைய பட்டயத்தை உருவினான். நான் மேலும்.... இந்த இன்னொரு மனிதனும் தன் பட்டயத்தை உருவினான். யோசுவா "நீர் யாருக்காக இங்கே இருக்கிறீர், நீர் எங்களுக்காகவா? அல்லது எங்கள் எதிராளிகளுக்காகவா? என்று கேட்டான். 101. அவர், "இல்லை, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதி. உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளை கழற்றிபோடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது", என்றார். அவன் அங்கே கர்த்தருடைய சேனையின் அதிபதியாகிய இயேசுவை முகமுகமாய் சந்தித்தான். அவர் அவனிடம், "மதில்களை சுற்றி ஆர்ப்பரித்து அணிவகுத்து செல்லவும், எக்காளங்களை ஊதும்படி கூறி, பிறகு எரிகோவின் மதில்கள் விழும்", என்றார். மேலும் தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்தபடியே அவர்கள் பாலஸ்தீனா தேசத்தை கைப்பற்றி அங்கே குடியேறினார்கள், ஏனென்றால் தேவனுடைய வாக்குத்தத்தம் அவர்களுடையது. 102. இப்பொழுது, என் சகோதரனே, இன்றிரவு நாம் வாக்களிக்கப்பட்ட தேசத்தின் பாதையில் இருக்கிறோம். இன்னும் சில நிமிடங்களில், கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிற அவர்களுடைய பாவமன்னிப்புக்காக இந்த ஞானஸ்நான குளத்தில் ஜனங்களை அடக்கம் செய்துகொண்டிருப்போம். நான் இதை சொல்ல விரும்புகிறேன். கிறிஸ்துவில் நீங்கள் உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கவில்லையென்றால், இன்றிரவே நீங்கள் அதை செய்வீர்களாக. நீங்கள், "நல்லது சகோதரன் பிரன்ஹாம், தேவன் என்னை விரும்பவில்லை நான் எதற்குமே தகுதியில்லாதவன்" என்கிறீர்கள். ஆம், நீங்கள் அப்படித்தான். 103. சிறிது காலத்திற்கு முன்பு, நான் டென்னசியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் நின்று வெவ்வேறு விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐம்பது பவுண்டுகள் எடையுள்ள ஒரு மனிதனின் உடலைக் குறித்த ஆராய்ச்சியின் அறிக்கையை பார்த்தேன், அவனுடைய மதிப்பு எவ்வளவு, அவன் எவ்வளவு இருந்தான் தெரியுமா? எண்பத்திநான்கு சென்ட்டுகள். இரசாயனத்தின் மதிப்பில் எண்பத்தி நான்கு சென்ட்டுகள். இரசாயனத்தின் மதிப்பில் எண்பத்திநான்கு சென்டு மதிப்புள்ள நூற்றைம்பது பவுண்டுகள் எடையுள்ள ஒரு மனித உடல். ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்வதற்கு போதுமான கால்சியம் மற்றும் ஒரு கோழியின்கூட்டில் தெளிக்க மற்றும் வெள்ளையடிக்க போதுமான அது போன்று உங்களிடமிருந்த சிறிய காரியங்கள் அனைத்துமே எண்பத்திநான்கு சென்ட்டுகள். ஆனால் நீங்கள் அந்த எண்பத்திநான்கு சென்ட்டுகளை சுற்றி நூறு டாலர் மதிப்புள்ள மேலங்கியை போட்டுக்கொண்டு மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தவர் என்று எண்ணிக்கொண்டு அவர்களிடம் பேச விரும்பாமல், அந்த எண்பத்திநான்கு சென்ட்டுகளுக்கு மேல் போட்டுக்கொண்டு நீங்கள் உங்களை ஒரு பெரிய மனிதரைப் தொப்பியை போல் எண்ணிக்கொண்டு நடக்கிறீர்கள். அங்கே ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவர், "நாம் மதிப்புமிக்கவர்கள் அல்ல. இல்லையா, ஜார்ஜ்?" என்றார். 104. நான் திரும்பி பார்த்து நான், "ஆனால், பையனே, உன் சரீரம் அதிக மதிப்புடையதல்ல, ஆனால் நீ பெற்றிருக்கிற ஆத்துமா பத்துலட்சம் உலகங்கள் மதிப்புடையது. அதைப்பற்றி என்ன?" என்றேன். அவன் எவ்வளவு பெரியவனாயிருந்தானென்று அவன் தனது புயங்களை காட்டிக்கொண்டு இருந்தான். நான், "அதைக்குறித்து என்ன?", என்றேன். மனிதன் அவன் என்னவாயிருக்கிறான் என்று பெருமையடித்து கொள்ளவே விரும்புகிறான். 105. சிறிது காலத்திற்கு முன்பு மேற்கில் ஒரு கூட்டத்தை உடையவனாயிருந்தேன். நான் இரவு உணவிற்கு வயதான ஒரு பண்ணையாளருடன் வீட்டிற்கு சென்றேன். அவருடைய ஜனங்களில் சிலர் சுகமடைந்திருந்தனர். நாற்பத்தைந்து கூடாரங்களை வாங்கத்தக்க ஒரு காசோலையை அவர் எனக்கு கொடுத்தார். நான் விரும்பியிருந்தால் அதை பெற்றிருக்கலாம். நான், "உங்கள் பணம் எனக்கு வேண்டாம்", என்றேன். என்னுடைய சகோதரர் ஹோவர்ட் என்னுடன் இருந்தார். அவர், "பில். நீர் ஏன் அந்த காசோலையை பெற்றுக்கொண்டிருக்கக்கூடாது?" என்றார். நான், 'அவருடைய பணம் எனக்கு வேண்டாம். என்னுடைய அநுதின (அன்றாட) பிழைப்பு அன்றன்று இருக்கட்டும்", என்றேன். நான் தேடுவது பணம் அல்ல, நான், கர்த்தராகிய இயேசுவை சேவிக்கிற ஒருவன், 106. கலிபோர்னியாவில் மெலிகியன்ஸ் என்ற இடத்தில் அந்த பெண் சுகமடைந்தபோது அவர் அங்கே நின்று கொண்டிருந்தார். இங்கே லூயிஸ்வில்லில் செய்தித்தாளில் நீங்கள் அதை பார்த்தீர்கள். அவர்கள் இங்கே வந்த பொழுது அந்த முகவர்களில் இருவர் பதினைந்து இலட்சம் டாலர்கள் கொண்டுவந்து, நான் இந்த இரண்டு அறைகள் கொண்ட குடிசையில் வசித்தபோது அதை எனக்கு வழங்கினர். நான், "அதை பார்க்க கூட விரும்பவில்லை" என்று கூறினேன். இல்லை, ஐயா. இல்லை, ஐயா" பணஆசை எல்லாத்தீமைக்கும் வேராயிருக்கிறது. அந்த காரியத்திலிருந்து விலகியிருங்கள். இந்த பண்ணையாளர் வெளியே வந்து, "ரெவரெண்ட் பிரன்ஹாமே? என்றார். நான், "ஆம் ஐயா" என்றேன். பின்பு அவர், "அந்த மலைகளை பார்க்கிறீரா?" என்றார். நான், "ஆம் ஐயா" என்றேன். "எவ்வளவு தொலைவில் அது இருக்கிறது என்று எண்ணுகிறீர்?" நான், "எனக்கு தெரியவில்லை என்றேன். மேலும் அவர், "அது எண்பது மைல்கள். அதுவும் அதற்கு அப்பாலும் எனக்கு சொந்தமானது. இது என்னுடைய மேய்ச்சல் நிலம்", என்றார். நான், "ஓ, என்னே! அது அற்புதம்!", என்றேன். 107. அவர், "நான் அங்கே பார்க்கிறேன், அந்த நகரத்தை பார்க்கிறீரா?" என்றார். அவர், "அந்த நகரில் ஒரு வங்கி எனக்கு சொந்தமானது; அங்குள்ள நிலம் முழுவதையும் சொந்தமாக கொண்டுள்ளேன். அது முழுவதும் எனக்கு சொந்தமானது", என்றார். ஓ அனைத்தும் அவருக்கு சொந்தமானது. 108. அவரது சிறிய சரக்கு வாகனம் (station wagon) நிறுத்தப்பட்டது. நான் அவரைப்பார்த்தேன், மிகவும் நல்ல மனிதர். நான் அவருடைய தோளின்மேல் என் கரத்தை போட்டு, "சகோதரனே, நான் உம்மிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்", என்றேன். அவர், "சரி" என்றார். நான், "சரியாக மேலே நோக்கிப் அதைப்பாருங்கள். அங்கே மேலே நீங்கள் எவ்வளவு சொந்தமாக வைத்துள்ளீர்கள்?" என்றேன். பாருங்கள்? அவர், "சகோதரன் பிரன்ஹாம், எனக்கு அங்கு எதுவுமே சொந்தமில்லை", என்று பணிவுடன் கூறினார். 109. நான், "அங்கே தான் என்னுடைய பொக்கிஷங்கள் இப்பொழுது இருக்கிறது. இங்கே என்னிடம் எதுவும் இல்லை. இங்கே எனக்கு சொந்தமாக கூடாரம் இருந்தாலும் அல்லது குடிசையாக இருந்தாலும் நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அங்கே எனக்காக ஒரு மாளிகையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்! மாணிக்கங்கள், வைரங்கள், வெள்ளி மற்றும் பொன் ஆகிய சொல்லிமுடியாத ஐசுவரியத்தால் அவருடைய பொக்கிஷசாலைகள் நிரம்பியுள்ளன. ஆம் ஐயா. அங்கு தான் ஐசுவரியங்கள் குவிந்துள்ளன. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். 110. அவர்கள் ஒருமுறை ஜிப்சி ஸ்மித்துக்காக அன்பின் காணிக்கையை எடுத்துக்கொண்டிருந்தனர். அன்றிரவு அவர்கள் வெளியே செல்வதற்காக கட்டிடத்தின் பின்புறத்தில் சென்றபொழுது, அங்கே கந்தலான உடையில் ஒரு ஏழை பெண் நின்று கொண்டிருந்தாள். எல்லாமே.... ஏறக்குறைய அவள் அவளுடைய ஆடைகள் முழுவதும் கிழிந்திருந்தது. அவளிடம் ஏதோ இருந்தது, அவள் திரு.ஸ்மித்தை பார்க்க வேண்டும் என்று கூறினாள். எனவே ஜிப்சி ஸ்மித், "அன்பே, உனக்கு என்ன வேண்டும்?" என்றார். 111. அவள், "திரு. ஸ்மித் அவர்களே, உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை, ஒரு மாதத்திற்கு முன்பு கிறிஸ்துமஸ் நாளன்று, யாரோ ஒருவர் எனக்கு ஒரு லாலிபாப்பை கொடுத்தார்கள். திரு. ஸ்மித் அவர்களே, நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன். எனது தகப்பன் இரட்சிக்கப்பட்டார். இப்பொழுது அவர் குடிகாரன் அல்ல, அதனால் இந்த லாலிபாப்பை உங்களுக்கு கொடுக்க நினைத்தேன், "என்றாள். 112. திரு ஸ்மித் அவருடைய கன்னங்களில் கண்ணீர் வழிய அதை தன் கரங்களில் எடுத்தார். அவளது கரங்களை தட்டிக்கொடுத்து, "அன்பே, இன்றிரவு எனது காணிக்கையில் ஆயிரக்கணக்கான டாலர்கள் காசோலைகளாக உள்ளன. ஆனால் நான் பெற்றிருக்கிற அனைத்திலும் இதுதான் மிகப்பெரிய பரிசாயிருக்கிறது. இது உன்னுடைய தாழ்மையான இருதயத்திலிருந்து வந்தது," என்றார். ஓ, என்னே! 113. நண்பர்களே, இன்றிரவு நீங்கள் பெற்றிருப்பது என்ன? என்னவாயிருந்தாலும் நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் கிடையாது. ஏன் நீங்கள் பெற்றிருக்கிற அனைத்தையும் கிறிஸ்துவுக்கு கொடுக்கக் கூடாது? வாருங்கள் இந்த யோர்தானை கடப்போம். நாம் கடந்து சென்று தேசத்தை சுதந்தரிப்போம். நீங்கள், "நல்லது சகோதரனே, இந்த நகரத்தில் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துள்ளது என்று உங்களுக்கு தெரியும். நான் இந்த நகரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அமைப்பை சார்ந்தவன்" என்கிறீர்கள். எப்படிபார்த்தாலும் நீ என்னவாயிருக்கிறாய்? உங்களிடம் என்ன உள்ளதோ அதை அவரிடம் கொடுங்கள். இங்கே யோர்தானை சுற்றி ஒன்று கூடி இன்றிரவு அதை கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்வோம். கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கும் பொழுது அதை அவர் செய்யவேண்டும் என நான் ஜெபிக்கிறேன். 114. நான் இன்னும் சிறிது நேரம் பிரசங்கிக்க முடிந்தால் நலமாயிருக்கும். ஆனால் என் தொண்டை கரகரப்பாயுள்ளது. பரவாயில்லை, ஒரு நிமிடம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். 115. கர்த்தராகிய தேவனே, இன்றிரவு நாங்கள் யோர்தானுக்கு அருகில் நிற்கிறோம். அந்த சேற்று அலைகள் வெளியே தெறிக்கிறது. இந்நாட்களில் ஒன்றில் நாங்கள் அங்கு வரவேண்டும். என்று அறிந்திருக்கிறோம். மேலும் நம் ஒவ்வொருவருக்கும் முன்பாக இருக்கும் அந்த ஒரு பெரும் கருந்துளை, மனிதன் உள்ளே செல்லும் பெரிய ஆழமான மரணவாசல் என்று நான் உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் என்னுடைய இருதயத்துடிப்பு துடிக்கும் போது நான் அங்கே நெருங்கி கொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன். நான் அங்கே வரவேண்டும். கர்த்தாவே, ஒவ்வொரு மனிதனும் பெண்ணும், சிறு பையனும், சிறு பெண்ணும் அந்த இடத்திற்கு வர வேண்டும். நாங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம் என்று நீர் மாத்திரமே அறிவீர். ஆனால், கர்த்தாவே நான் ஒரு கோழையை போல அங்கு வர விரும்பவில்லை, கூச்சலிட்டபடி நான் அங்கே வர விரும்பவில்லை. மனந்திரும்ப இன்னும் சில நாட்களை எனக்குத் தாரும். 116. நான் ஒரு வீரனைப் போல வர விரும்புகிறேன். அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிவேன்" என்று பண்டைய பவுலை போல சொல்லிக்கொண்டு நான் வர விரும்புகிறேன். சில பிரசங்கிகளுடன் என் கரங்களை குலுக்குவதினால் அல்ல, ஒரு சபைப்புத்தகத்தில் என் பெயரை சேர்ப்பதினால் அல்ல, என் தலையின் மேல் சில தண்ணீர் துளிகளை தெளிப்பதினால் அல்ல. அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிய விரும்புகிறேன். அவர் என் பெயரை அழைக்கும் பொழுது, நான் மரித்தோரிலிருந்து எழுந்து வருவேன். ஒ தேவனே! இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு இருதயத்தின் விருப்பமும் அதுவாக இருக்கட்டும். 117. அங்குள்ள மனிதரும் பெண்களும் இங்குள்ள சிறுபையன்களும், சிறுபெண்களும் இலவசமாக கொடுக்கப்பட்ட பாவமன்னிப்பில் உம்மையும், ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுத்தகத்தில் தங்கள் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறதையும், அறிந்திருக்கவில்லை என்றால், அவர்கள் இப்போதே தங்கள் முடிவை எடுக்கட்டும். பிதாவே அதை அளியும். நாங்கள் ஜனங்களை நேசிக்கிறோம். உம்முடைய ஊழியத்தை நீர் எங்கும் நிரூபித்திருக்கிறீர். நீர் இங்கே இருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இஸ்ரவேலர் யோர்தானை கடப்பதைபற்றி நாங்கள் சிந்தித்து கொண்டிருந்தோம். ஏன்? நீர் அதை அவர்களுக்கு வாக்களித்தீர், நீர் அதை அவர்களுக்கு கொடுத்தீர். நீர் அதை எங்களுக்கும் கொடும், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் எழுந்து எங்களுக்கு சொந்தமானதை சுதந்தரிப்போமாக! அதை அளியும், கர்த்தாவே. 118. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கின்ற வேளையிலே, "சகோதரன் பிரன்ஹாம், நான் யோர்தானை கடக்க விரும்புகிறேன்" என்று இருதயத்தில் உத்தமமாக சொல்லும் ஒரு நபர் இன்றிரவு இங்குள்ளாரா என்று நான் வியக்கிறேன். நான் கடக்க விரும்புகிறேன், ஆனாலும் நான் இன்னும் சரியாக இல்லை, நான் அங்கே போவதற்கு தகுதியில்லை. நான் இருக்கும் நிலையில் தேவனை சந்திப்பதை வெறுக்கிறேன். நீங்கள் கரங்களை உயர்த்தி 'சகோதரர் பிரன்ஹாம், எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள், நீர் அதை செய்வீரா?" என்று கூறுவீர்களா? நான் அதை செய்வேன். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் யார்? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னே! எங்கும் கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது. வேறு யாரோவொருவர் உங்கள் கரங்களை உயர்த்தி, "சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்" என்று கூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஐயா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், சகோதரி, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், சிறுபெண்ணே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், சிறுபையனே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், ஐயா. அது சரிதான். இன்னும் வேறுயாராவது ஒருவர் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். 119. இப்பொழுது பாருங்கள் ஜனங்களே, இதுவே நீங்கள் கலந்து கொள்ளும் கடைசி சுவிசேஷ கூட்டமாயிருக்கலாம். நான் சென்று திரும்பிவரும் பொழுது, என் மனைவி என்னிடம், "இன்னார் இன்னார் உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்பாள். ஆம்" "அவர்கள் மரித்து விட்டார்கள், இவர்கள் கொல்லப்பட்டார்கள், அவர் மாரடைப்பால் சென்று விட்டார்" உண்மையாகவா சொல்கிறாய்?" "ஆம்". 120. ஓ என்னே! ஒரு முறை பீட அழைப்பை கொடுத்ததை நான் நினைவு கூறுகிறேன். அந்த மனிதன் அங்கே உட்கார்ந்திருப்பதை கண்டேன். நான் அவர் வரவேண்டுமென விரும்பினேன். நான், "அவர் எப்போதாவது இரட்சிக்கப்பட்டாரா என யாருக்காவது தெரியுமா?" என மேடாவிடம் கேட்டது என் நினைவுக்கு வருகிறது. 121. "இல்லை, அவர் பணியிலிருந்து வரும்போது திடீரென்று மரித்துவிட்டார். அவர் காலணிகளை (Shoes) அணிகிற வேளையில் அவர் மரித்தார். அவர் விபத்தில் கொல்லப்பட்டார். அவர் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவேயில்லை, ஒரு நாள் இரவு தூங்க சென்றார். அதன்பிறகு எழுந்திருக்கவேயில்லை.' "ஓ என்னே! அந்த மனிதனுக்கும், அந்த பெண்ணுக்கும், அந்த வாலிபர்களுக்கும் கூட நான் பிரசங்கித்தை நினைவுகூறுறேன். 122. நண்பனே. இப்பொழுது காரியங்களை தவறாக மதிப்பிடாதீர்கள். உண்மையாக இன்றிரவு நீங்கள் பாவியாயிருக்கிறீர்களா? இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் மறுபடியும் பிறவாதிருந்தால், நீங்கள் இன்னும் கிறிஸ்துவை விட்டு தூரமாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பினால், உங்களில் எத்தனை பேர் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? இங்கே எங்களுக்கு இடமில்லை, ஒரு பலிபீட அழைப்பை நான் இங்கே கொண்டிருப்பேன் என்று நினைக்கவில்லை. நீங்கள் உங்கள் பாதங்களால் எழுந்துநின்று, "சகோதரன் பிரன்ஹாம். எழுத்து நிற்பதின் மூலம் இந்த சாட்சியை நான் கொடுக்கிறேன். இப்பொழுதே நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் வாழ்கின்ற இந்த பழைய நிலையில் இருந்து விடுபட விரும்புகிறேன்". 123. உங்கள் கால்களில் எழுந்துநிற்க கூடுமானவரை உங்கள் இருதயத்தில் நேர்மையுள்ளவராயிருப்பீரா? யார் அதை முதலில் செய்வது, நான் அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறுவீர்களா? சகோதரனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே மூன்று பேர் நின்று கொண்டு இருக்கிறீர்கள். ஒருகணம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே, நீ விரும்பினால் அப்படியே நிற்பாயா? சீமாட்டியே நீ விரும்பினால், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு ஒருவர். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக ஐயா. வேறு ஒருவர் எழுந்து நின்று, "நான் இப்பொழுது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன், என்னுடைய நிலையிலிருந்து விடுபட விரும்புகிறேன்", என்று கூறுங்கள் ஐயா. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரோ ஒருவர் அங்கே பின்பாக குழந்தையை வைத்துக்கொண்டு கரங்களையுயர்த்தியிருக்கிற உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, சற்று அப்படியே நில், உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரோவொருவர் சீக்கிரம் எழுந்து நில்லுங்கள். இங்கே என்ன? இங்கே இருக்கிற உங்களுடைய சிறிய குழந்தைகளைக்குறித்து என்ன? இளம் பெண்ணே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. அங்கே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் விரும்பினால் சற்று அப்படியே நில்லுங்கள். சிறிய பெண்ணே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரோவொருவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர் எழுந்து நில்லுங்கள். அது சரி. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக எழுந்து நில்லுங்கள். வேறு யாரோவொருவர், "நான் இப்பொழுதே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். சகோதரன் பிரன்ஹாம், இப்போதே நீங்கள் என்னை நினைவு கூற வேண்டுமென்று விரும்புகிறேன்", என்று கூறுங்கள். நிற்பீர்களா? உங்களுக்காக காத்திருக்கிறேன். "நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்" நீங்கள் ஒரு பாவி என்று அறிந்திருக்கிறீர்களா அல்லது சந்தேகம் மட்டும் தானா.....? 2